பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 芝53。 தாள்? பதிவிரதா தருமம் என்னும் தவம்தான் செய்த தொரு தவத்தின் பயனாக இருப்பது போல் இருந்தாள்' என்று பேராசிரியர் விளக்கினது இன்னும் நான் அவர் பேச்சைக் கேட்பதுபோல் உள்ளது. இன்னும் கூறுவார்: அரக்கிமார் பிராட்டியை நெருங்கி நெருங்கி அச்சுறுத்துகின்றனர். கல்லினிடையே தோன்றி ஒரு துளி நீராயினும் தன்மேல் துளிக்கப் பெறாத மூலிகைபோல் அழகு கெட்டுக் காணப் பெறுவாள். பெருமானின் கருணையைப் பெறாமல் மிகவும் மெலிந்து காணப்பெறுகின்றாள். நன்ம ருந்துபோல் நலன் அற வுணங்கிய நங்கை மென்ம ருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்." 'முன்பு பிராட்டிக்கு மருங்குவில் மாத்திரம் இருந்த மெலிவு பெருமானைப் பிரிந்துள்ள நிலையில் பருத்திருந்த மற்றைய உறுப்புகளிலும் பரவுவதாயிற்றுப் போலும்’ என்று விளக்குவார். தொடர்ந்து அரக்கிகளிடையே இருந்த பிராட்டி புலிகளின் கூட்டத்திலகப்பட்டுக்கொண்ட தாகிய ஓர் இளம் பெண்மானை ஒத்துக் காணப்பட்டாள். உறக்கத்தைத் துறந்தவளாதலின் கண்ணை மூடுவதும். இல்லை; இமைத்தலும் இல்லை. அவள் கண்கள் இடை. விடாது தாரை தாரையாக நீர் வடிந்து கொண்டிருந்த நிலையில் உள்ளாள். நெடுங்கண்கள். மழைக்கண் என்பது காரணக் குறியென வகுத்தாள். மகளிர் கண்கள் மழை போலக் குளிர்ச்சியான இயல்புடைமையால் மழைக் கண் என்று வழங்கப்படும். பிராட்டியின் கண்கள் எப்பொழுதும் இடையறாது நீர் மழையைப் பொழிதலால் மழைக் கண்‘ என்று காரணக் குறி யாயிற்று' என்பது பேராசிரியரின் விளக்கம். 6. சுந்தர. காட்சி-3