பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蒙器翻 மலரும் நினைவுகள் இன்னும் அவள் திருமேனி எப்படிக் காணப்பட்டது. தெரியுமா? ஆவி யந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்; தூவி யன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்; தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த ஓவி யம்புகை யுண்டதே யொக்கின்ற உருவாள்.' திருமால் சயனித்திருக்கும் பாற்கடலைக் கடைந்ததால் தோன்றியது அமிர்தம். அதற்குத் தெய்வத் தன்மை உண்டு. எப்படி? அது கண்ணுக்கு இனியதாக இருப்பது: யாவராலும் விரும்பப்படுவது: உண்டாரை மரணத்தை யொழித்து வாழ்விப்பது; தன்னை நுகர்ந்தவர் வேறொன் றையும் நுகராமல் தடுக்கும் தன்மையுடையது; கிடைத்தற் கருமையுடையது; மிக்க இனிய சுவையுடையது என்பன போன்றவை. இத்தகைய அமிர்தத்தைக் கொண்டு அனங்கவேள்- மன்மதன்- எல்லாராலும் விரும்பத் தக்கவன்-தீட்டிய ஓவியம் போன்றவள் பிராட்டி. அந்த ஒவியத்தின் மீது புகை (ஆவி) படிந்தது போன்ற உருவத்தையுடையவள். பன்னாட்கள் நீரைக் காணாததீர்த்தமாடாத-திருமேனியையுடையவள் என்பதைத் சதுரவி (அன்னத்தின் சிறகுகள்) யன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள் என்று காட்டப் பெறுகின்றது. இத்தகைய திருமேனியில் அணிந்திருந்த ஆடையும் ஒன்று தான்; அதுவும் புகைபோல் (ஆவி) மெல்லிதாகிய ஆடையே இராவணன் விலையுயர்ந்த பல ஆடை யாபரணங்களைக் கொடுக்கக் காத்திருந்தனனாயினும் அவற்றில் ஒன்றையும் விரும்பினாள் அல்லள் என்பதையும் காட்டியவாறு . حساحمسحسم مستعجسم مسیحیت بیبیسیم 7. சுந்தர் காட்சி.11