பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 255 திருமேனியைக் காட்டிய கவிஞன் அவன் திருவுள்ளத் தையும் காட்டுகின்றான். அருந்து மெல்லடகு ஆர்இட அருந்து என்று அழுங்கும் விருந்து கண்டபோது என் உறுமோ என்று விம்மும் மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்(கு) என்று மயங்கும் இருந்த மாநிலம் செல்அரித்து இடவும் ஆண்டு எழாதாள்." இராவணன் எந்த இடத்தில் சிறை வைத்தானோ அந்த இடத்தைக் கரையான் பிடித்து அரித்த போதிலும் அந்த இடத்தை விட்டு அகலாது அமர்ந்திருக்கின்றாள். மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’ என்று வாழ்க்கைத் துணையைச் சிறப்பிப்பார் வள்ளுவப் பெருந்தகை. 'இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை' அல்லவா? சிந்திக்கின்றாள் பிராட்டி; 'காட்டில் அருந்தப்படும் மென்மையான இலையுணவை யாவர் பரிமாற உண்ணுவார்? என்று வருந்துவாள்.” செல் விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பாள்" இராமனுக்கு விருந்து வரும்போது உபசரிப்பார் இல்லையே?’ என்று என்ன துன்பப்படுவாரோ? என்று எண்ணி வருந்துவாள். யான் இப்போது கொண்டிருக் கின்ற மனப்பிணியைத் தீர்க்கும் மாமருந்தும் உண்டு கொல்?’ என்று மயங்குவாள். இப்படியாகப் பிராட்டியின் திருவுள்ளம் காட்டப்படுகின்றது. 8. சுந்தர, காட்சி.15 9. குறள்-51 18. வாக்குண்டாம்-21 (ஒளவையார்)