பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் ፪59 சிறந்த மருமகளாகத் திகழ்கின்றாள். இராஜ ரிஷியாகிய ஜனக மகாராஜனின் மகளாகப் பிறந்ததற்கேற்பப் பிறந்த குலத்திற்கு ஏற்ற பெருமையை நிலைநாட்டு கின்றாள். இத்தகைய பெருமாட்டி என் சிறந்த தெய்வம் ஆகின்றாள்' என்று கூறும் மாருதி இன்னமும் சிலவற்றை எடுத்துரைக்கின்றான். இங்ஙனம் எடுத்துரைத்த சிலவற்றுள் ஒரு சில ஒரு பாடலில் பகரப் பெறுகின்றன. உன்குலம் உன்ன தாக்கி உயர்புகழ்க் கொருத்தி யாய தன்குலம் தன்ன தாக்கித் தன்னையித் தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக் கீந்து அவ் வானவர் குலத்தை வாழ்வித்து என்குலம் எனக்குத் தந்தாள் என்இனிச் செய்வ தெம்மோய்." என்ற பாடலில் இவற்றைக் காணலாம். உலகத்தில் பிறந்த ஒருவர் தன் குடிபிறப்பொன்றை மேம்படுத்துவது அரிது. ஆனால் வள்ளுவர் பெருமான், குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்." என்பார். தன் குடியை முன்னேறச் செய்யப்புகும் கடமை யுணர்ந்த ஒருவனுக்கு ஊழும் வரிந்து கட்டிக் கொண்டு விரைந்து முன்வந்து துணை செய்யும் என்பது இதன் கருத் தாகும். ஆனால் பல குடியை உயரச் செய்கின்றாள் என்ற அதுமன் வாக்கைப் பேராசிரியர் இராகவன் அற்புதமாக விளக்குவார். பிராட்டி இராமனை மணாளனாகப் பெற்ற பிறகு அவன் குலப் பெயரே மாறி வருகின்றது. இதுகாறும் சூரிய குலம், மறுகுலம், ககுஸ்தகுலம், இரகு 14. சுந்தர. திருவடி தொழுத-61 15. குறள்-1923 (குடிசெயல்வகை)