பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மூர், நாராயணசாமி பிள்ளை 9 அங்ங்னமே நானும் போய்வந்து கொண்டிருந்தேன். இங்ங்னம்பழகி வரும்போது அவரது அளவற்ற தமிழ்ப் பற்று, சமயப்பற்று, சமரசநோக்கு, எவ்வெவ்வாறெல்லாம் தமிழ்மொழியிடம் பிற கலைச் செல்வங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பவை தலைதுாக்கி நின்றன. இக்காலத்தில் மாணாக்கர்களின் கல்வியீடுபாடு குறைந்து வருவதன் காரணம், அவர்களிடம் ஒழுங்குமுறை சீர் குலைந்து வருவதற் குரிய காரணம் போன்ற பல்வேறு செய்திகள் எங்கள் பேச்சில் இடம் பெதும், படாடோபயின்றி, அதிக விளம்பரமின்றி ஆக்க வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கையுடையவர் என்பதை அவரிடம் காண முடிந்தது. என்னை அதிகம் படிக்கவேண்டும். அதிகம் எழுதவேண்டும் , அரசியலில் ஈடுபடக் கூடாது. நாம் சமூகத்திடம் பெறும் ஊதியத்திற்கேற்ப நம் தொண்டு சமூகத்திற்குப் போய்ச் சேரவேண்டும், நம்முடைய பணிகளை இறையுணர்வுடன் ஆற்றி வரவேண்டும் என்பன போன்ற அறிவுரைகளைத் தருவார் . இந்த அறிவுரைகள் என்னை ஒரளவு நன்னெறிகளில், ஆக்கப் பணிகளில் கொண்டு செலுத்தி வருகின்றன என்பதை இன்றும் நினைந்து பார்க்கின்றேன். காலை 9-45 வரை இந்தச் சல்லாபம் நடைபெற்று வரும், 9-55க்குக் காரில் ஏறுவார்; என்னையும் ஏற்றிக் கொள்வார்; தாம் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டு என்னைக் கருத் தரங்கம் நடைபெறும் இடத்தில் இறக்கிவிடச் செய்வார். ஒருநாள் திரு. பிள்ளையவர்களிடம் பிஎச்.டி பட்டம் பெறவேண்டிய என் ஆர்வத்தைத் தெரிவித்தேன். எந்த முறையிலும் என்னைப் போன்ற தனியார் அப்பட்டத்தின் பொருட்டு ஆய்வதற்கு விதிமுறைகள் இடர்பாடுகளாக இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டினேன். ஒர் இரண்டாண்டிற்குத் தற்காலிகமாகவாவது இந்தப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பளித்தால் நான் அழகப்பர் ஆசிரியர்க் கல்லூரியில் பணித்துறை மீள்