பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () மலரும் நினைவுகள் உரிமையுடன் (Lier) விடுப்பு வாங்கிக்கொண்டு வரமுடியும். என்பதையும் தெரிவித்தேன். அப்போது அவரது ஒரு சாலை மாணாக்கரும் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி யின் பொருளாதாரத் துறையின் பேராசிரியருமாகிய திரு. இருதயசாமி ரெட்டியார் அவர்களும் உடன் இருந்தார்கள்; அவரும் என் வேண்டுகோளுக்குப் பரிந்துரை செய்தார்கள். என்ன காரணத்தாலோ இந்த என் வேண்டுகோளை திரு . பிள்ளையவர்களால் நிறை. வேற்றி வைக்க முடியவில்லை. தட்டிக் கழிக்கும் போக்குடையவர் அல்லர் என்பதை நான் நன்கு அறிவேன். அவரிடம் உதவி பெறும் ஊழ்இல்லை என்பதை நான் நினைத்துக் கொண்டேன். சந்தர்ப்பம், சூழ்நிலை சரியாக அமையவில்லை போலும் என்பதை ஊகித்துக் கொண்டேன், தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறம்192) என்ற சங்கப் புலவர் வாக்கையும், ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெப்தும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்’ என்ற ஒளவைப் பாட்டியின் வாக்கையும் நினைந்து அமைதி பெறுவேன். கருத்தரங்க ஆய்வில் கலந்துகொண்ட விரிவுரையாளர் களில் தம் திறமையால் என் உள்ளத்தை அதிகம் கவர்ந்தவர் திரு K. அரங்கசாமி அய்யங்கார் என்ற தாவர இயல் விரிவுரையாளர். ஒரு மாதிரிப் பாடத்தை மிகவும் அற்புதமாகக் கற்பித்தார். நாற்பது வயதைத் தாண்டியவர். பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பிருந்தும் பிஎச்.டி பெறாதிருந்தார். குடும்பச் சூழல் ஆய்வில் கருத்தைச் செலுத்த முடியாமல் தவிர்த்தது போலும். ஒருநாள் பிள்ளை அவர்களிடம் இவர் 3. நல்வழி-27