பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ . நாராயணசாமி பிள்ளை 1 I திறமையை எடுத்துக் கூறினேன். மாதிரிப் பாடம் ஒன்றைக் கவனித்தால் இவர்தம் திறமையை அறிந்து கொள்ளலாம் என்றேன். இதற்கு ஒரு நாள் குறிக்கப் பெற்றது; பிள்ளையவர்களும் இதனை வந்து கவனித்தார் கள். இத்தகையவர்கள் பலர் இருந்தால் தமிழ்மூலம் அற்புதமாக கற்பிக்கலாம் என்று சொல்லிப் போனார்கள். மறுநாள் காலையில் இவர் பேச்சு பிள்ளையவர்கள் திருமாளிகையில் எழுந்தபோது, ரீடராக இருக்க வேண்டியவர்கள் விரிவுரையாளராகவே கிடக்கின்றார்கள். பாவம், குடும்பச் சூழ்நிலை டாக்டர் பட்டம் வாங்க முடியாது செய்கின்றது போலும்!’ என்று சொல்லி வைத்தேன். இவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற கருத்து இவர்தம் பேச்சில் குறிப்பாகத் தெரிந்தது. பிறிதொரு சமயம் பல தமிழறிஞர்களைப்பற்றியபேச்சு எங்களிடையே எழுந்தது. விபுலானந்தர் அடிகள், பண்டித மணி, கா. சுப்பிரமணியப் பிள்ளை, நாவலர் ச. சோம சுந்தர பாரதியார் போன்றவர்கள் பணியாற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அத்தகைய பெரியோர்கள் இல்லாத நிலை அருகி வருகின்றது என்றார்கள். இந்தச் சமயத்தில் நான் வீர. உலக ஊழியனார் பெயரைக் குறிப்பிட்டேன். இப்புலவர் நாட்டார் மாணவர் என்றும், ஆழ்ந்த புலமையுடையவர் என்றும், இசைஞானமும் நல்ல குரலும் பெற்றிருப்பதால் இவரது சொற்பொழிகள் கேட்போர் கவனத்தை ஈர்க்கக் கூடியவை என்றும், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உரையுடன் இவருக்கு மனப்பாடம் என்றும் குறிப்பிட்டேன். இவர் நாமக்கல்லில் தமிழாசிரியராக இருந்த பொழுது இவர் புலமையை நன்கு அறிந்திருந்தேன் என்றும் நான் வித்துவான் தேர்வுக்குப் படித்தபொழுது (1944–45) பொருநராற்றுப் படையை கையில் நூலொன்றும் இன்றி எனக்குப் பாடம் சொன்னது. என்னை வியக்க வைத்தது என்றும் தெரிவித்தேன்.