பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. பூரீ. ஆச்சாரியார் 263。 பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சை பசுங் கொண்டல்' எனக்கு நன்கு அறிமுகமானது இவரது எழுத்தோவியங் களின் மூலம் தான். பின்னர் இவன் என்னை ஆட்கொள் வான் என்பதை அப்போது நான் அறியவில்லை. மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வன் அடியேன் திருப்பதியில் பணியாற்றிய காலத்தில்தான் என்னை முற்றிலும் அடிமை கொண்டான். பி. பூரீயின் எழுத்தோவியங்கள் எல்லாம் இதற்கு ஒா அ துணை செய்திருக்குமோ? என்று - கின்றது. கல்விஉளவியல் ல் கோட்பாடுகள்’ என்ற கற்றவன: நான் துறையூசில் பணியாற்றிய காலத்தில் (1941-50) தான் தமிழன்னையும் ஆட்கொண்டாள். அறிவியலிலும் கணிதத்திலும் ஆராக்காதல் கொண்டு அடிமைப் பட்டவ னைத் தமிழைப் புதிய போக்கில் பரப்பக் கூடியவன் என்று கருதித்தான் தமிழன்னை என்னைத் தத்து' எடுத்துக் கொண்டாள் எனக் கருதுகின்றேன். இந்தத் தத்துப் பிள்ளையின் தமிழறிவை துறையூருக்கு நான் வர் வழைத்த தமிழ்ப் பெரியார்களாகிய பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார், திரு பு. ரா. புருடோத்தம நாயுடு, பேராசிரியர் சி. இலக்குவனார், திரு வீ. உலக ஊழியனார், லாலுகுடி நடேச முதலியார், டாக்டர் மு. வரதராசனார், பேராசிரியர் அ. மு. பரம சிவானந்தம், பேராசிரியர் அன்பு கணபதி, பேராசிரியர் பூ. ஆலால சுந்தரம் செட்டியார், பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணாதுரை ஆகியோர்களின் சொற்பொழிவுகள் தண்ணிர் விட்டு வளர்த்தன; என் தமிழார்வத்தை மேலும் தட்டி எழுப்பி என்னை ஆழ்ந்து தமிழ் இலக்கியதைக் கற்கச் செய்தன; வித்துவான், எம். ஏ. பட்டங்களையும் பெறத் துாண்டின. எழுத்துப் பணியிலும் இறங்கச் செய்தன. நான் கல்லூரியில் இடை நிலை வகுப்பில் பயின்ற காலத்தில் எனக்குக் கட்டுரை