பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意莎蒂 மலரும் நினைவுகள் எழுதும் முறையைத் தெளிவாகக்கற்பித்தவர் பேராசிரியர் மு. நடேச முதலியார். கட்டுரையின் கூறுபாடுகளையெல் லாம் புதிர்க்கதிர்படங்கள் (X-ray photo) போல் எடுத்துக் காட்டி வழிப்படுத்தியதால், நான் நன்கு தமிழ் கற்ற பிறகு நீரில் விட்ட மீன் குட்டி இயல்பாக நன்கு நீந்தக் கற்றுக் கொள்வதுபோல், என் எழுத்துப் பணி என் இரண்டாம் இயற்கையாகவே அமைந்து விட்டது. எழுத எழுத என் எழுத்தில் புதிய மெருகேறி வருவதை நானே உணர்கின்றேன். துறையூரில் முதலாவதாக, என் கன்னி முயற்சியாகப் படைத்த கவிஞன் உள்ளம் என்ற நூலுக்கு அக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த தமிழ்க்காதலர் திரு. தி. க. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களிடம் அணிந் துரை பெறவேண்டும் என்பது என்பேரவாவாக இருந்தது. ஒரு தமிழ்க்காதலர் இன்னொரு தமிழ்க்காதலரை நாடுவது இயல்பு தானே. நூல் அச்சு முடிந்ததும் மூன்று பொம்மை உரு படிகளைத் (Dummy copies) தயார் செய்து வைத்துக் கொண்டேன். இதில் ஒரு படியை திரு. தி. சு. அவினாசி லிங்கம் செட்டியார் அவர்கட்கு முன்னரே அஞ்சவில் அனுப்பி வைத்துப் பத்து நாட்கள் அவகாசம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட நாளில் நேரில் வந்து அணிந்துரையைப் பெற்றுக் கொள்வதாகக் கடிதமும் எழுதி விட்டேன். அப்போது கடற்கரை சாலையில் (கச்சேரி சாலைக்கருகில்) ஒர் இல்லத்தில் அமைச்சரின் குடியிருப்பு அமைந்திருந்தது. குறிப்பிட்ட நாளில் சென்னை சென்று அமைச்சரவர் களைச் சந்தித்தேன். இந்த நூலில் பன்னிரண்டு கட்டுரை கள் சங்க இலக்கியங்களின் அகத்துறைப் பாடல்களின் விளக்கமாக இருந்தன. தாம் மாணியாதலாலும், காதல் தமக்கு ஒவ்வாததாலும், தாம் இராமகிருஷ்ணரின் பெயரி லுள்ள நிறுவனத்தைச் சார்ந்தவராதலாலும் இந்நூலுக்கு அணிந்துரை நல்குவதில் தம் இயலாமையை வருத்தத் துடன் தெரிவித்துக் கொண்டார். அப்போது தமிழ்க்