பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛?器 மலரும் நினைவுகள் நுட்பமாகக் காட்டும்போது நாம் உண்மையாகவே நம் மூக்கின்மீது விரலை வைக்கின்றோம். 1950-இல் நான் காரைக்குடிக்கு வந்த பிறகு இவர் கம்பன் திருநாளில் மூன்று முறை கலந்து கொண்டதாக நினைவு. அப்பொழுதெல்லாம் இவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கின்றேன். இக்காலத்தில் ஆழ்வார்கள்பற்றிய இவருடைய சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக 'மூவர் ஏற்றிய மொழி விளக்கு” என்பது ஒன்று. முதலாழ்வார்களின் பாசுரங்களைப் பற்றிய விளக்கு. நம்மாழ்வார் பற்றிய ஒர் அரிய நூலைப் படித்து மகிழ்ந்ததாக நினைவு. காரைக்குடி வந்த பிறகு அடிக்கடி எனக்குச் சென்னைப் பயணங்கள் இருந்து வந்தன. அப்போது பன்மொழிப் புலவர் திரு. ரெட்டியார் மயிலையில் வீடு மாற்றியிருந்தார் {35, இராக்கியப்ப முதலித் தெரு). இதேதெருவில் பி.யூரீயும் குடியிருந்தார். கள்.சில முறை பி.பூரீயை திரு ரெட்டியார் இல்லத்திலேயே சந்தித்திருக்கின்றேன்; அளவளாவி மகிழ்ந்திருக்கின்றேன். சந்திக்கும் போதெல்லாம் இலக்கியம் பற்றிய பேச்சுகளே இருக்கும். ஒரு நாளும் அரசியல் விமர்சனம் செய்ததே இல்லை. இவர் பழுத்த காந்தீயவாதி. கதராடையே இவர் திருமேனியை அலங்கரிக்கும்: 1960-இல் திருப்பதி சென்ற பிறகும் அடிக்கடி என் சென்னைப் பயணங்கள் இருந்து வந்தன. அப்பொழுதெல் லாம் கூட இப்பெருமகனாரைத் தெ நவிலும் இல்லத்திலும் சந்தித்துச் சல்லாபித்ததுண்டு. 1983-இல் பன்மொழிப் புலவர் மறைந்த அன்று இவரைப் பார்த்ததுண்டு; கேதம் விசாரிக்க வந்திருந்தார். மறைந்த பெருமகனாரைப் பற்றி மிகவும் துக்கப்பட்டார்; அவர்தம் உயர்ந்த பண்புகளையும் புலமைக் கூறுகளையும் பற். ன்றிரண் கழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். பும் பற்றி ஒ டு நிகழ் 6ïF