பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. யூரீ. ஆச்சாரியார் 37.3 நெருநல் உளன்.ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்துஇவ் உலகு. (குறள் 336) என்ற குறளையும் நினைவுகூர்ந்தார்.வெற்றிலைப்பாக்கை மென்று. கொண்டே அவற்றின் சுவையையும் சேர்த்தே தமிழ் இலக்கியச் சுவையையும் அதுபவிக்கும் பெருமகனார் பி. பூரீ அவர்கள். 1963-க்குப் பின்னர் இவரைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்கு ஏற்பட வில்லை. சில ஆண்டுகட்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டலாபுரம் என்ற தம் சொந்த ஊருக்கே சென்று விட்டார் என்பதை அறிந்தேன். பிறந்த மண்ணிலேயே திருநாடு அலங்கரித்த செய்தியும் எனக்கு எட்டியது; வருந்தினேன். ஆயினும், அவரது திருமேனியின் தோற்றமும் இலக்கியப் பேச்சுகளும் என் உள்ளத்தில் நிலையான இடம் பெற்றுள்ளன. இவருக்கு மிகவும் பிடித்தவை காந்தி, காஃபி, கம்பன்’’. ம நி-18