பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 & மலரும் நினைவுகள் கீரனூர் வரை ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் வகையில் எங்கள் உரையாடல் அமைந்திருந்தது. பிறகு, எங்கள் பேச்சு கம்பராமாயணத்தின் பக்கம் திரும்பியது. "கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் டி. கே. சி. படித்திருக்கின்றேன் ஐயா, வித்துவான் தேர்வுக்கு யுத்தகாண்டம்-கும்ப கருணன் வதைப் படலம்' முடியபாடமாக இருந்தது.அப்போது படித்திருக்கின்றேன். அதன் பிறகு சேலம் திரு. வீ. உலக ஊழியனார், லால்குடி நடேச முதலியார் போன்ற புலவர்கள் ஆற்றிய கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கின்றேன்.” என்றேன். தொடர்ந்து, தாங்கள் வெளியிட்டிருக்கின்ற கம்பராமாயணப் பதிப்புகள் சிலவற்றைப் பார்த்திருக் கின்றேன். சிலவற்றைப் பள்ளி நூலகத்திற்காக வாங்கியும் வைத்திருக்கின்றேன்' என்றேன். என் பதிப்பிலுள்ள பாடல்கட்கும் பிறபதிப்புகளிலுள்ள பாடல்கட்கும் உள்ள வேறுபாடுகளைக் கவனித்தீர்களா?' என்று கேட்டார். "புதிதாகத் தொடங்கப்பெற்ற பள்ளியாதலால் நாடோ றும் நடைபெறும் வேலைகளைத் தவிர வேறுபலபணிகளின் பளு காரணமாகப் பாடல்களைச் சோதித்து அறிவதற்கு வாய்ப்பும் இல்லை; நேரமும் இல்லை. ஆனால் புலவர்கள் தாங்கள் பாடல்களைத் திருத்துவதையும், நீக்குவதையும், நீக்கும் பாடல்களைச் செருகுகவிகள் என்று திருநாமம் இடுவதையும் பற்றி கண்டனக் குரல்கள் எழுப்புவதையும் கேட்டிருக்கின்றேன். இவற்றைக் கேட்கும் தாங்கள் திருத்தி வெளியிட்ட பாடல்களையும் வேறு பதிப்பிலுள்ள பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆர்வம் இருந்தும் நேரம் இல்லாமை காரணமாக அவ்வாறு நோக்கவில்லை’ என்றேன். - பிறகு வனவாசத்தினின்றும் அயோத்திக்குத் திரும்பிய பிறகு இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்ற தல்லவா? அதுபற்றிய கம்பன் பாடலைப் படித்திருக் கின்றீர்களா?' என்று வினவினார் இரசிகமணி. நன்றாகத் தெரியும். நானும் படித்திருக்கின்றேன். செகவீர