பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி.டி.கே. சி. - 279 பாண்டியன் போன்ற பல புலவர்கள் அதைப்பற்றிச் சிறப் பித்துப் பேசுவதையும் பலமுறை கேட்டதனால் பாடலே எனக்கு மனப்பாடமாகி விட்டது' என்று கூறி பாட்டையே, அரியணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன் வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி' என்று ஒப்பித்தேன். பேஷ். பேஷ், இவ்வளவு நல்ல பாடலை மனப்பாடமும் பண்ணி வைத்திருக்கின்றீர்களே. அதற்கு மிகவும் பரிதாபப்படுகின்றேன்' என்று கூறினார். அவர் பேச்சில் நல்ல என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்துப்பேசியது என்னைத் திகைக்க வைத்தது: பின்னர் சிந்திக்கவும் வைத்தது. . இப்படிச் செருகுப் பாடல்கள் கம்பன் பாடல்களுடன் கலந்து வருவதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டேன். அந்தக் காலத்தில் இப்படிப் பாடல்கள் நுழைந்ததைப் பற்றிச் சிந்திக்கவில்லை. வை. மு. கோ. பதிப்பில் மிகைப் பாடல்கள்’ என்று பல இடங்களில் காணப்படுகின்றன. பலபாடல்கட்குப் பல்வேறு பாட பேதங்கள் காணப்படு கின்றன. வை. மு. கோ. அவர்கள் ஏதோ தாம் பொருத்த மாகக் கருதும் ஒரு பாடத்தைப் பாட்டுடன் சேர்த்துவிட்டு ஏனைய பாடபேதங்களை பாடலின் உரைக்குக் கீழ்க் காட்டியுள்ளார்கள் இஃது ஏன்?’ என்று நான் எப்பொழு தும் சிந்திக்கவில்லை. இப்போது டி. கே. சி அவர்கள் தாம் பொருத்தமானவையாகக் கருதும் பாடபேதங்களை நுழைத்துப் பாடலைப் திருத்துவது நியாயம்தானே? 4. புத்தகாண்டம்-திருமுடி சூட்டு படலம்.-38