பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மலரும் நினைவுகள் என்று என்மனம் எண்ணியது. அப்போது இந்தப் பாட பேதங்கள் யாவும் முன்னர் ஏடெழுதுவோரால் நுழைக்கப் பெற்றவை தானே? அப்படி நுழைந்தவர்கள் யாவர் என் பதை நாம் அறியோம். இப்போது நுழைகின்ற டி. கே. சி. நம் முன் இருக்கின்றார்கள். இதனால் புலவர் கூட்டம் இவரைக் கண்டிக்கின்றது. இப்படிக் கண்டிக்கும் போதும் 'நுழைப்பது சரியல்ல என்று சொல்லுகின்றார்களே யொழிய அவர் நுழைத்த பாடத்துடன் பாடல்களைப் படித்து அவற்றை அநுபவிக்காமல் விாளா குறை கூறுவது பொருத்தமற்ற செயல்தானே? என்றெல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கினேன். அவர்கள் அவ்வாறு அவர்மீது வசை புராணம் பாடுவது நேர்மையற்ற (Uncharitable) செயல் என்றும் நினைத்துக்கொண்டேன். ஒரு சமயம் 'இராமாயணத்திற்கு ஒரு கைகேசி, கம்பராமாயணப் பதிப் பிற்கு ஒரு டி. கே. சி. என்ற கண்டனக் குரல் என்னை மிகவும் வருத்தியது. நான் விடுத்த வினாவிற்கு டி.கே.சி பதில் கூறினார் கள். ஏதோ சிறியவன் ஒருவன் கேட்டானே என்று உதாசீனம் செய்யாமல் சொன்ன அவர்தம் பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது. 'தம்பீ, கேளுங்கள்’’ என்று தொடங்கி, 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கம்பர் இராமாயணப் பாடல்களை ஏட்டில்தான் எழுதி வைத்தார் கள். ஏடு என்பது பனையோலைதான் என்பது உங்கட்குத் தெரியும்" என்றார்கள். தொடர்ந்து பேசினார்கள் : 'அந்தக் காலத்தில் வீடுகளின் தளம் மண்தளம்தான். மோடு கூரையால் வேயப்பட்டது. மழையால் வீடுகள் ஒழுகுவதற்கும் தரை ஈரம் ஆவதற்கும், ஈரத்தால் கரையான் உற்பத்தியாவதற்கும், இந்தக் கரையான் ஒலைச்சுவடிகளை அரிப்பதற்கும் வாய்ப்பான இடம்தான் அந்தக் காலத்து வீட்டின் தரை. இந்தக் காரணத்தால் ஏடு களின் பல பகுதிகள், முக்கியமான அடிப்பகுதிகள்