பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி.கே. சி. . 281 கரையான் அரித்ததாலோ ஈரத்தால் மட்கியோ அழிந்து போய் விட்டன என்றார். தொடர்ந்து, இவ்வாறு அழிந்து பட்ட செயல் ஒரளவு அப்படியே நின்றதே என்பது நம் அதிர்ஷ்டம்தான். பாடல்களை ஒரளவு சுவைப்பது நம்மவர்கட்கு இயல்புதானே. இங்ங்ணம் சிதைவுபட்ட ஏடுகளை நம்மவர் படித்துக் கொண்டுதான் வந்தார்கள். ஆண்டுகள் பல உருண்டோடின. இந்த நிலையில் சிலருக்கு ஏதோ பட்டது; ஒழிந்துபோன பாகங்களைத் தாம் நிறைவு செய்தால் என்ன? என்று நினைத்தார்கள். தொடங்கினார்கள் தம் இலக்கிய கைங்கரியத்தை”. இவர்களில் சிலர் யாப்பிலக் கணம் படித்தவர்கள். எதுகைகள், மோனைகள், சீர்கள் இவற்றைக் கொண்டு கம்பரை நிறைவு செய்து விடலாம் என்று எண்ணி விட்டார்கள். ஒர் அம்மன் காசு பொறாத கண்ணாடித் துண்டுக்குப் பட்டை தீட்டினால் வயிரமாகி விடுமா? (இப்படிப் பேசும்போது இருப்பூர்தி புதுக்கோட்டை நிலையத்தில் நின்றது). ஆனாலும் தமிழர் களாகிய நம்மைப் பிடித்த பூர்வ வினை (சஞ்சித கர்மம்) அந்தக் காலத்துக் கவிராயர்களை அவ்வாறு நினைக்கத் து.ாண்டி விட்டது, பிறர் சொல்லக் கேட்ட கதை, தாம் படித்த கதை, தமக்கு மனத்தில் தோன்றிய கதை எல்லாம் சேர்ந்து, குழப்பமாய் வெறும் செய்யுட்களாக அவதாரம்: செய்து புறப்பட்டு விட்டன. இந்தச் செய்யுட்கட்குக் கம்ப ராமாயண ஏடுகள் புகலிடமாய் விட்டன. இப்படி வந்து புகுந்த பாடல்களில் ஒன்றுதான் சிறிது நேரத்துக்கு முன் தாங்கள் ஒப்புவித்த திருப்பாடல்’’ என்றார்கள். மேலும் தொடர்ந்தார்கள். என்னைக் கண்டது முதல் என் இலக்கிய ஆர்வத்தை அறிந்து கொண்டது முதல் அவருக்கு ஒரே உற்சாகம் ஏற்பட்டு விட்டது. அயோத்தியை விட்டு இராமன் வனத்திற்குப் போனான். பதினான்கு ஆண்டு வனவாசம். வனத்தில் இராமனுக்குக்