பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மலரும் நினைவுகள் கிடைத்தவர்கள் பத்தரை மாற்றுத் தங்கமான அன்பர்கள். கங்கைக் கரைவேடனான குகன், கிட்கிந்தையில் அநுமன் சுக்கிரீவன், தெற்குக் கடற்கரையில் வீடணன் ஆகிய இந்த நால்வரும் இராமனது இதயத்தில் சிந்தாமணிகளாகத் திகழ்கின்றார்கள். வனவாசம் முடிந்து இராமன், இலக்குவன், சீதாப்பிராட்டி ஆகிய மூவரும் அயோத் திக்குத் திரும்புகின்றனர். இவர்களோடு மேலே கூறிய நான்கு பேர்களும், வாலியின் மகன் அங்கதனோடு, அயோத்திக்கு வந்திருக்கின்றனர். பட்டாபிஷேகம் நடை பெறுகின்றது. முடி சூட்டு விழாவுக்கு பெருந்தோரணை ஒன்று உண்டல்லவா? மேலே சுட்டி உரைத்த கவிராயரது காலத்தில் சடையப்ப வள்ளல் புரம்பரையைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் பெயரும் திருவெண்ணெய்ச் சடையன். அந்தச் சடையனுக்குக் கவிராயர் புகழ்மாலை ஒன்று கட்டிச் சுட்டுகின்றார்' என்றார்கள். தம்பீ. இப்போது நீங்கள் ஒப்புவித்த செய்யுளுக்கு வருவோம்; அதைப் பார்ப்போம்” என்றார்கள். 'அரியணை அநுமன் தாங்க’ இவ்வாறு பாட்டு தொடங்குகின்றது, சிம்மாசனத்தை. அதுமான் தாங்குகின்றானாம். ஏன் தாங்குகின்றான்? நமக்குப் பொருள் துலங்கவில்லை. இந்தப் பாடலை யாத்த கவிராயருக்குத்தான் இதன் பொருள் வெளிச்சம். அங்கதன் உடைவாள் ஏந்த” அங்கதனுக்கும் இடம் கண்டு பிடித்தாய் விட்டது. அங்கதன் சிறிய பையன். அதனால்தான் அவனுக்கு உடைவாள் தாங்கியானான். அவ்வளவுதான். சுக்கிரீவன், வீடணன், குகன் இவர்கட்கு சிம்மாசனத்தின் பக்கம் இடம் இல்லை. அதாவது செய்யுளில் இடம் இல்லை. இருவர்வெண் கவரிவீச' இலக்குவன், சத்துருக்கனன் என்ற இராமனது சகோ தரர்களை இருவர் என்று சொல்லப் பெற்றுள்ளது.