பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. - 883. ஏதோ பேரற்ற அனாமதேயப் பேர்வழிகள் இரண்டு பேர், அவ்வளவுதான். சீதாப்பிராட்டியைப் புகழ்வதற்கு "சொற்கள் அகப்படாமல் விரைசெறி குழலி என்று. அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. செய்யுளை டி. கே. சி. அவர்களே சொல்லுகின்றார்கள். அரியணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி. சாமானியப் புராணச் செய்யுள் கூட இவ்வளவு கீழ்த் தரமாக இருக்காது. இதில் அங்குமிங்குமாகச் சொற்களும் பொருள்களும் நஞ்சு பிஞ்சுமாகத் தொங்குகின்றன. தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்த மனத்திற்கு இந்தச் செய்யுள் மிக்க சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இது கம்பன் பாடிய செய்யுளா? இல்லவே இல்லை. கவிராயரிட மிருந்தும் செய்யுளிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்ளு வோம்' என்று சொல்லி முடிக்கும்போது இருப்பூர்த்தி செட்டிநாடு நிலையத்தை அடைந்துவிட்டது. இப்போது செருகுகவிகள்' என்பவை எப்படிப் பட்டவை என்பது எனக்குத் தெளிவாகிவிட்டன. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்ற பழமொழியின் பொருள் இப்போதுதான் எனக்குத் தெளிவாயிற்று. ஓர் உயர்ந்த இரத்தின வியாபாரி வயிரம் எது? புஷ்பராகம் எது? ரெங்கூன் கமலம் எது? என்று எளிதாகத் தேர்ந்தெடுப்பது போல டி.கே.சி. பாடலின் தரத்தை அற்புதமாகப் பரிசோதிப்பதை அறிந்து வியந்தேன். உண்மையாகவே