பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝84 மலரும் நினைவுகள் கம்பன் எப்படிப் பாடியிருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொண்டு சுவைக்க வேண்டியது அவனது கடமை. நல்ல கவிதைகளில் ஒர் எழுத்தோ சொல்லோ மாறி விழுந்துவிட்டால் அதைப் படிக்கும் சுவைஞனுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுக்கும் என்பதை டி.கே.சியுடன் பழகிய பின்னர்தான் அறிந்தேன். நல்ல கவிதைகளையே கேட்டும், படித்தும் அநுபவித்த டி.கே.சிக்கு எந்த இடத்தில் ஒலிநயம் (Rhythm) கெடுகின்றது? எந்த இடத்தில் தாளம் தவறு கின்றது? சொற்கள் மாறி விடுகின்றன? கவி உருவமே குலைகின்றது? என்பது நன்கு தெரிந்துவிடுகின்றது. நல்ல பாடத்தைத் தேடுகின்றார். துருவித் துருவிப் பார்க் கின்றார். இவ்வளவு செய்தும் அவருக்கு மன நிறைவு ஏற்படாவிட்டால் அதில் கை வைக்கின்றார்; பாடலின் சுளுக்கு நீங்குகின்றது. பாடலும் மெருகு ஏற்றப் பெற்ற நகைபோல் பளிச்சிட்டு ஒளிர்கின்றது. இவர் திருத்திய பாடலைப் படிக்கும்போது நமது உள்ளத்தில் இல்லாத புத்துணர்ச்சிகள் எழுகின்றன என்பதை உ ைர முடிகின்றது. இருப்பூர்தி காரைக்குடி சந்திப்பை அடைகின்றது. கம்பன் அடிப்பொடியே டி.கே.சியை வரவேற்க நிலையத் திற்கு வந்திருந்தார். அடியேனை டி.கே.சி. கம்பன் அடிப்பொடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்களை காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஆசிரியர் குடியிருப்பில் திரு. வி. கே. சி.நடராசன் (அழகப்பர் கல்லூரியில் பொருளாதாரத்துறை விரிவுரையாளர்) இல்லத்தில் தங்க வைத்தார்கள். திரு. வி.கே.சி. நடராசன் திரு. தொ மு. பாஸ்கரத்தொண்டைமானுடைய மாப்பிள்ளை; திருமதி இராஜேசுவரியின் கணவர். நாங்கள் வீட்டிற்குப் போகும் போது ஏற்கெனவே இரண்டு நாட்கள் முன்னதாகவே திரு. தொண்டைமான் வந்திருந்தார்கள். அவருக்கும் அவர் மாப்பிள்ளைக்கும் இரசிகமணி என்னை அறிமுகம் செய்து