பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 289 விழாவில் டி. கே. சி. தலைமை தாங்கி உரையாற்றினார் கள். அதற்கும் யானும் சென்றிருந்தேன். அங்கே சொ. முரு.வின் அறிமுகம் பெற்றேன். இங்கு நிகழ்த்திய உரையில், கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெல்லாம் சதுர்வேதம்; கிளைகளின்ற களையெல்லாம் சிவலிங்கம்; கனியெலாம் சிவலிங்கம்; கனிகளின்ற சுளையெலாம் சிவலிங்கம்; வித்தெல்லாம் சிவலிங்க சொரூபமாக விளையுமொரு குறும்பல வின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே? (கிளை-கூட்டம்: களை-வளார்) என்ற குற்றாலக் குறவஞ்சியிலுள்ள பாடல் விளக்கம் பெற்றது. சுமார் அரைமணி நேரம் திருப்பித் திருப்பிப்பாடி அநுபவித்தார்கள் இந்தஅநுபவம்கூடியிருந்தோர் இடையில் பரவி அவர்களையும் தம் அநுபவத்துடன் கலக்கச் செய்து விட்டார்கள். கூட்டம் கலைந்துபோகும்போது கூடி யிருந்தோ ஒவ்வொருவரும் இந்தப் பாடலைக் சொல்லிக் கொண்டே போனதைக் கண்டு வியந்து போனேன். டி. கே. சி.யை நன்றாக அறிந்தவர் திரு.தொண்டைமான் அவர்கள். அவருடைய உரையை எவ்வளவு நுட்பமாகக் கவனித்துக்கேட்டுள்ளார். என்பதை அவர் வாக்கினாலேயே அறிவோம். கம்பனைப் பற்றி, தமிழ்க் கவிதையைப் பற்றி டி. கே. சி பேசும்போது டி. கே. சியின் நா(க்கு) பேசும்: டி. கே. சியின் வாய் பேசும்; அடர்ந்த நெற்றிப் புருவம் பேசும்; செழித்து வளர்ந்துள்ள மீசை பேசும்; எல்லா வற்றிற்கும் மேலாக அவருடைய உள்ளமே நம்முடைய 7. திரிகடராசப்பர் கவிராயர் குற்றாலக்குறவஞ்சி 8 ம. நி.-19