பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感夺争 மல்ரும் நினைவுகள் உள்ளத்தோடு பேசும்,' தோண்டைமானின் இந்த அதுபவத்தை நானும் டி. கே. சி.யின் இரண்டு பேச்சிலும் கேட்டு அநுபவித்தேன். இதற்குப் பிறகு இந்தப் பெரியாரைப் பார்த்துப் பழகும் பேறு பெறவில்லை, இதன் பிறகு இவரைப்பற்றி எழுதிய நூல்களையும் இவர் படைத்த கட்டுரை நூல்களையும் ஆர் வத்துடன் படிக்கத் தொடங்கினேன். இதற்குமுன் இவர்கள் எழுதிய நூல்களை மேலோட்டமாகப் படிந்திருந்தேன். இவர் அறிமுகமான பிறகு இவற்றை ஆழ்ந்து கற்றுச் சிந்திக்கத் தொடங்கினேன். இவரை வீர வழிபாடு செய்து வந்த வட்டத் தொட்டி அன்பர்களில் சிலரும் பிறரும் கம்பன் திருநாளில் அறிமுகம் ஆனார்கள். இவர்களில் குறிப் பிடத்தக்கவர்கள் ஜஸ்டிஸ் மகராஜன் பேராசிரிபர் அ. சீநிவாசராகவன், திரு A, C. பால், நாடார், பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர், பேராசிரியர் தெ. பொ. மீ., பேராசிரியர் அ. ச. ஞான சம்பந்தம் முதலிய பலர். இவர்கள் வயிலாகவும் டி. கே. சி.யைப் பற்றி அடிக்கடி கேட்கும் வாய்ப்புகள் இருந்தன. இவர்கள் கூறியவற்றையெல்லாம் ஈண்டுக் கூறின் இந்த நினைவு மிக நீளும் என்று அஞ்சியே இத்துடன் நிறுத்திக் கொள்ளு இன்றேன். தமிழிசை இயக்கத்தில் டி. கே. சி.க்குப் பெரும் பங்கு உண்டு என்பதை இவர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். டி. கே. சி.யின் திருத்தங்கள் : டி. கே. சி.யை நன்கு அறிந்து கொண்ட பிறகு அவர்கள் திருத்திய பாடல்களை யெல்லாம் கூர்ந்து நோக்கிக் கற்கத் தொடங்கினேன். அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். முதலில் கம்பராமாயணத்தில் ஒன்றைக் காட்டுவேன். 1. இராமனுக்குத் திருமுடி சூட்டு விழா நடக்கப் போகின்றது என்பதை அறிந்த மக்கள் எப்படியுள்ளார்கள் என்பதைக் கம்பர் வருணிக்கின்றார், 8. ரசிகமணி டி. கே.சி. பக்கம்-17