பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29艘。 மலரும் நினைவுகள் னுக்கு வந்த அபவாதத்தைப் போற்றுகின்றவராகின்றனர். இந்தத் திருத்தத்தைப் படித்த பிறகு கம்பர் எப்படிப் பாடியிருப்பார்? பெயர்த்து ஏடெழுதுவோர் எப்படித் தப்பும் தவறுமாகப் பின்னர் எழுதியிருப்பார்கள் என்று இப்போது நன்கு தெளிவாகின்றதல்லவா? 2. ஆண்டாள் பாசுரம் ஒன்றில் இவர் செய்த திருத்தம் ஒன்றைக் காட்டுவேன். கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தி(து) இருக்குமா? மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் காற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்-ஆழி வெண்சங்கே!' என்பது திவ்வியப் பிரபந்தங்களில் காணும் பாட்டின் வடிவம். இதில் வருகின்ற நாற்றமும்’ என்ற சொல் நன்றாக இல்லையென்று கருதுகின்றார் இரசிகமணி. அதைத் திருத்தி அமைத்து விடுகின்றார். கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் (து) இருக்குமோ? மருப்பொசித்த மாதவன் வாயமுதும் வாசமும் விருப்புற்றுக் கேட்கின்றேன். சொல்ஆழி யெண் சங்கே: என்பது டி. கே. சி.யின் திருத்தம் பெற்ற பாசுர வடிவம். பாட்டின் சுளுக்கை எடுத்து விடுகின்றார் இதில், 3. கவிதை நயம் குறைந்த பாடல் ஒன்று இரசிகமணி திருத்தியபின் எப்படிக் கவிதை நயம் பெற்று விடுகின்றது 10. நாச். திரு. 711