பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. - àâí፣ என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு. சுமார் முப்பதாண்டுகட்கு முன்னர்,செட்டி நாடு என்ற இதழொன்றில் ஒரு வெண்பா வெளியிடப் பெற்றது. இயற்றியவர் பெயர் காட்டப்பெற. வில்லை. வெண்டாவைப் படித்ததும் டி. கே. சி. க்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இதோ ஒர் அற்புதமான கவிதை தமிழுக்குக் கிடைத்து விட்டது!’ என்று பெருமிதத் துடன் முழங்கினார்கள். இது முருகனைப் பற்றிய பாடல். இதில் இரண்டு திருத்தங்கள் செய்யப் பெற்றன. திருத்தம் பெறுவதற்கு முன் பாடலின் வடிவம் இது. மன்றல் கமழ்குழல்சேர் வள்ளிக்கு வாய்த்தானை வென்றி மயிலேறும் வித்தகனை-ஒன்றின் முளையானை, யாவர்க்கும் மூத்தானை, யானைக்கு இளையானை, நெஞ்சமே ஏத்து. திருத்தம் பெற்ற பிறகு பாடல் அடியிற் கண்டவாறு வடிவம் பெற்றது. மன்றல் குழல்கமழும் வள்ளிக்கு வாய்த்தவனை வென்றி மயிலேறும் வித்தகனை-ஒன்றின் முளையானை யாவர்க்கும் மூத்தானை, யானைக்கு இளையானை, நெஞ்சமே ஏத்து. திருந்திய பிறகு பாடல் ஒலி நயத்தில் சிறந்து நிற்கின்றது என்பதை உணர்கின்றோம். ஆனால், சிறப்புக்குக் காரணம் இன்னதென்று நம்மால் சுட்டிக்காட்ட முடிய வில்லை. ஜஸ்டிஸ் மகராஜனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இரசிகமணியே காரணத்தை அடியிற் கண்டவாறு விளக்கு வதை அறிகின்றோம். 'முதலடியில் பாடம் மன்றல் கமழ் குழல்சேர்’ என்றிருந்தது. இதில் சேர்’ என்ற வார்த்தை பிய்ஞ்சி