பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 மலரும் நினைவுகள் தொங்குகின்ற மாதிரி இருக்கின்றது. வள்ளி'யோடு அங்கமாய்ப் பொருந்தவில்லை. குழல் கமழும் வள்ளி' என்று சொல்லும்போது, அங்கமாய் நின்கின்றது. இஃது. ஒரு சிறு திருத்தம் தான். ஆனால், வாய்த்தவனை என்ற திருத்தம்தான் முக்கியமான திருத்தம். இதழில் வாய்த்தானை' என்று இருக்கின்றது. அது வித்தகனை என்ற இரண்டாம் அடியில் வரும் இளக்கமான இலக்கணப் பாங்குக்கு மேலாகப் போய் விட்டது. வாய்த்தவனை வித்தகனை இந்த இரண்டும் இளக்கமான நீண்டு செல்லும் ஒசை. ஆனால், முளை யானை மூத்தானை இளையானை என்னும் வடிவங்கள் எழுத்துக் குறுகி, வேகத்தோடு ஒலிப்பன. இந்த வேகத்தைக் கெடுத்து விடுகின்றது வாய்த்தானை' என்று முதலடியில் வரும் வேகம் கொண்ட வடிவம்: மூன்றாவது நான்காவது அடிகளில் வரும் அற்புதமான, பொருள் பொதிந்த வேகத்தைக் கெடுத்து விடுகின்றது. கெடுக்காமல் இருப்பதற்கே திருத்தம். மறுபடியும் வெண்பாவைத் திருத்தத்துடன் சொல்லிப் பார்க்கலாம் . "மன்றல் குழல் கமழும் வள்ளிக்கு வாய்த்தவனை வென்றி மயிலேறும் வித்தகனை-ஒன்றின் முளையானை, யாவர்க்கும் மூத்தானை, யானைக்கு இளையானை, நெஞ்சமே, ஏத்து’’