பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 295 |மன்றல் குழல்-பூமாலை சூடிய கூந்தல்; ஒன்றின் முளையானை-அநாதியான பொருள்; வேறொரு பொருளிலிருந்து வராத தத்துவம். யாவர்க்கும் மூத்தானை-அவனுக்கு முன் யாரும் இருந்த தில்லை , ! கவிதையில் விஷயம், வேகம், ஒசை எல்லாம் அமைந் திருக்கின்றன். ' பாடலின் வடிவினை முடியக் கண்டவர்கள்தாம் முதலடியில் உள்ள ஓசை எவ்வாறு மூன்றாவது நான்காவது அடிகளின் இங்கிதத்தையும் வேகத்தையும் கெடுக்கின்றது என்று கண்டு கொள்ள முடியும். 4. இதய ஒலி' என்ற அவர்தம் நூவின் ஒரு கட்டுரையில், கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. என்ற குறளுக்கு (குறள்-332) அவர் தந்த விளக்கம் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. இது எப்போதோ படித்தது. இது செல்வ நிலைமையைக் கூறும் குறள்நாடகம். அல்லது திரைஅரங்கில் மக்கள் ஒவ்வொருவ ராகச் சீட்டு வாங்கிக் கொண்டு மெதுவாக வந்து சேர் கின்றனர். கொட்டகை நிரம்ப ஓர் அரைமணி நேரம் ஆகின்றது. இவ்வாறு மெதுவாகக் கூடுவதை முதலடியில் உள்ள நீண்ட சீர்கள் உணர்த்துகின்றன. ஆட்டம் அல்லது படம் முடிந்ததும் கூட்டம் மிக வேகமாகக் கலைந்து விடு கின்றது. இரண்டாம் அடியில் உள்ள குறுகலான சீர்கள் உணர்த்துகின்றன. ஒருவருக்குச் செல்வம் சேர்வதை நீண்டகாலம் ஆவதை நீண்ட சீர்களும், அஃது அவர்களிட மிருந்து நீங்கிப் போவதைக் குறுகிய சீர்களும் உணர்த்து கின்றன. நீண்ட சீர்களைப் படிப்பதற்குச் சற்று அதிகக்