பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 299; யைப் பெறவில்லை. இது 1950 ஜூன் இறுதியில் வந்த செய்தியாகும். இந்த உதவியை, காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள்-102) என்ற வள்ளுவப் பெருமானின் பொன்மொழிக்கும் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது. 1949 மார்ச்சு-ஏப்பிரலில் காரைக்குடியில நடை பெற்ற கம்பன் திருநாளைக்கண்டு களிப்பதற்குக் காரைக்குடி சென்றிருந்தேன். அப்போது ஏற்பட்ட ஒரு சிறு அறிமுகமே அவருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு. நான் ஒர் உயர் நிலைப்பள்ளித் தலைமையாசிரியன் என்பது மட்டுமே என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். ஏதோ தமிழ்ப்படித்தவன் என்பதும் தெரிந்திருக்கலாம். 1956 ஏப்பிரல்-மேயில் புதிதாகத் தொடங்கப் பெற இருக்கும் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குப் பேராசிரியர் பதவிகட்கு விளம்பரம் வந்திருந்தது. அப் போது நான் ஒரு வழக்கு பற்றி சென்னைக்கு அடிக்கடிப் போய் வந்து கொண்டிருந்தேன். இதனால் விளம்பரம் என் கவனத்திற்கு வரவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட விண்ணப் பங்கள் வந்திருந்தன. எல். டி (பி.டி) பட்டவர்கள் (தமிழுக்கு) ஒருவரும்இலர். தமிழ்த்துறையைத் தொடங்கு வதற்குத் தக்கவர் இல்லாமையால் அடுத்த ஆண்டு தமிழ்த் துறையைத் தொடங்கலாம் என்று வள்ளல் டாக்டர் அழகப்பர் சொன்னாராம். ஆளில்லையே’ என்றாராம். "நான் கொணர்கின்றேன்’ என்று சா. க. சொல்ல, தமிழ்த் துறையைத் தொடங்கும் பொறுப்பு அவருக்கு விடப் பட்டது (சா. க. அழகப்பர் அறத்தின் உறுப்பினர்). என் படிப்புத்தகுதி சரியாக இருக்கும் என்று கருதி எனக்குத் தந்தி அனுப்பினார் சா. க. (சாவன்னா கன).