பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மலரும் நினைவுகள் ஒருநாள் பழகிலும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே -வெற்றிவேற்கை-34 என்ற அதிவீரராம பாண்டியனின் திருவாக்கிற்கு எடுத்துக் காட்டாக நின்றது. சா. க.விடம் நான் கொண்ட நட்பு. காரைக் குடிப் பணி என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய திருப்பம். கல்லூரி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே காரைக்குடி சென்றேன். நேராகச் சா.க.வின் வீட்டில் இறங்கினேன் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றது போல. அவருடைய கோயிலும் பிள்ளையார்பட்டிக் கோயில்தான். நகரத்தார்கட்கு ஒன்பது கோயில்கள் உண்டு. ஒவ்வொரு கோயிலுக்கும் உரியவர்கள் இன்னார் இன்னார் என்று அவர்களிடம் பிரிவு உண்டு. பிள்ள்ையார் பட்டிக் கோயில் என்பது ஒன்பது கோயில்களில் ஒன்று. இங்ங்னம் நான் பெற்ற நன்மை விநாயகப் பெருமான் அருளால்; இந்த நன்மை பிள்ளையார்பட்டி கோயிலைச் சார்ந்த சா. க. மூலம் என்னை வந்தடைந்தது. நான் சென்றபோது சா. க. வீட்டில் இருந்தார். என் நியமனம் பற்றி மேலே குறிப்பிட்ட விவரங்களையெல்லாம் சா. க. வே அன்று தெரிவித்தார். கல்லூரிகட்குப் பேருந்து வசதிகள் செய்யப் பெற்றுள்ளன என்றும் நான் நிற்க வேண்டிய இடங்கள் இன்னவை என்றும் விளக்கினார். மறுநாள் கல்லூரிப் பணியை ஒப்புக்கொண்டேன். 20 நாட்கள் மாணவர் உணவு விடுதியில் தங்கி அதற்குமேல் குடும்பத்தைக் கொணர்ந்து விட்டேன். என் இல்லமும் திரு சா. க. திருமாளிகையருகில் அமைந்தது. இது அடிக்கடி அப் பெரியாருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு அளித்தது. காரைக்குடி 16 ஆண்டு வாழ்விலும் அதற்குப் பின்னரும் அவருடன் கொண்ட தொடர்புகளால் சில நினைவுகள் என் உள்ளத்தில் இப்போது மலர்கின்றன.