பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 30 % அவருடைய திருமாளிகை எப்போதும் அறிஞர்கள், புலவர்கள், நாட்டுப் பற்றாளர்கள் இவர்கள் சூழ்ந்திருக் கும் இடமாகத் திகழும். அவருடைய பேச்சிலும் மூச்சிலும் கம்பன் காட்சி அளிப்பான். காந்தியடிகளும் மணிவாசகர் போன்ற சமயப் பெரியார்களும் அடிக்கடி தோன்றுவார் கள். சட்டை போடாத திருமேனியுடன் அரசமரத்துப் பிள்ளையார்போல்நெற்றியில் திரு நீற்றுப் பொலிவுடனும் குங்குமப் பொட்டுடனும் காட்சி அளிப்பார். சுறுசுறுப் புடன் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காட்சிகளை எவரும் மறக்க முடியாது. கற்பக நிலையம் உண்மை யிலேயே வேண்டுவார் இயன்ற அளவில் உதவிகள் பெறும் கற்பகமாகவே திகழ்ந்தது. மனம் வாக்கு காயங்களால் அவரிடம் உதவிகள் பெற்றவர்கள் எண்ணற்றவர். காரைக் குடி காந்தியாக, கம்பனடிப் பொடியாக, இன்று எல்லோர் மனத்திலும் அன்புருவாக விற்றிருப்பர் காரைக்குடிக் கற்பகம். நினைவு-1: காரைக்குடியில் பணியேற்றுச் சுமார் இருபது நாட்களுக்குள் என் குடும்பத்தைத் துறையூரி லிருந்து காரைக்குடிக்குக் கொண்டு வந்து விட்டேன். காரைக்குடியில் அப்போது (ஆகஸ்டு-1960) சா.கணேசன் ஒரு நூற்பு யக்ஞத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். கொப்புடையம்மன் கோயிலுக்கெதிரில் (மணிக் கூண்டுக்கு அருகில்) ஒரு பெரிய கொட்டகை அமைத்து அதில் பத்து நாட்கள் நூற்பு யக்ஞம் நடந்து கொண்டி ருந்தது. தக்ளியில் நூற்பவர்களும் இராட்டையில் நூற்பவர்களுமாக மாறி மாறி நூற்றுக் கொண்டிருந்தார் கள். எந்தத் திட்டத்தையும் சா.க. ஏற்று நடத்தினால் அதில் ஒரு தனித் தன்மை மிளிரும்.ஒருசிறு தடையுமின்றி அஃது ஒழுங்காக நடைபெறும். இந்த நூற்பு யக்ஞத்தைத் தொடங்கி வைப்பதற்கு திரு.o.P. இராமசாமி ரெட்டியார் (அண்மையில் முதலமைச்சர் பதவியினின்றும் விலகியவர்) எழுந்தருளியிருந்தார். சா.க. யக்ஞம்.நடை.