பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密酶2 மலரும் நினைவுகள் பெறும் இடத்தில்தான் இருப்பார். இதே சமயத்தில் மெளனசாமி என்ற துறவி (துறையூரில் இருந்தபோது பழக்கமானவர்) என் இல்லத்தில் மூன்று நாட்கள் தங்கி யிருந்தார். ஒருசிறு விருந்திற்கு என் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தேன். முற்பகல் முழுவதும் நானும் மெளனசாமி யும் நூற்புயக்ஞத்தைக்கண்டு களித்தோம். சா.க.என்னை திரு.O.P. இராமசாமி ரெட்டியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு காந்தியை ஏக காலத்தில் கண்டது போன்ற ஒரு பிரமை என் மனத்தில் ஏற்பட்டது. யாரும் செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு பின்பு வாசகம் உணரக் கேட்ட அப்பொழு(து) அலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா' என்ற பாடலைக் கம்பனில் படித்திருக்கின்றேன். எப்பொழுதும் இராமனது முகச்செவ்வி தாமரை மலரை யொத்திருக்கும். ஆனால் நீ போய்த் தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற்கொண்டு, பூழிவெங்கானம் நகண்ணிப் புண்ணிய நதிகளாடி, ஏழிரண்டாண்டில் வா' என்ற கைகேயியின் உரையைக் கேட்ட பின்பு அவன் முகச்செவ்வி அப்பொழுது அலர்ந்த செந்தாமரையின் செவ்வியையும் வென்றது என்பான் கம்பன். இதனையே பிறிதோரிடத்தில், மெய்த் திருப்பதம் மேவென்ற பொதினும் இத்தி ருத்துறந் தேகென்ற போதினும் 1. கம்ப.அயோத்.கைகேசி சூழ்வினை-108