பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ. நாராயணசாமி பிள்ளை i 3. ருந்தது. இதுவும் உயர்த்தப்படலாம் என்று நினைத்து தான் திருப்பதிக்கு விண்ணப்பம் அனுப்பினேன். இதற் குரிய பேட்டி (Interview) சென்னையில் துணை வேந்தர் எஸ். கோவிந்தரசஜூலு நாயுடு இல்லத்தில் (ஆர்ம்ஸ் в твя зр, கீழ்ப்பாக்கம்) நடைபெற்றது. இதற்குப் பதினெட்டு பேர் விண்ணப்பித்திருந்தார்கள். வல்லுநர் குழுவில் திரு. தி. மூ, நாராயணசாமி பிள்ளையும் டாக்டர் மொ. அ. துரை அரங்கனாரும் (அப்போது ரீடர், சென்னைப் பல்கலைக்கழகம்) இடம் பெற்றிருந்தனர். பதினேழு பேரின் பேட்டி முடித்த பிறகு இறுதியாக என்னை அழைத்தார்கள். பேட்டியில் கேட்கப் பெற்ற வினாக்கள், அவற்றிற்கு யான் அளித்த மறுமொழிகள், என் வெளியீடுகள் (ஐந்து-ஐந்தும் தரமானவை) Heisenberg Geir Nuclear physics g3 @Larry Guguri šg சென்னைப் பல்கலைக் கழகப் பரிசு பெற்றமை -இவை யெல்லாம் எனக்கு பலத்தைத் தந்தன என்று கருதினேன், ஏனையோருக்கு இத் தகுதி இல்லை. எல்லோரும் இளைஞர்கள். (முப்பது வயதிற்குக் குறைந்தவர்கள்) : நான் நாற்பது அகைையத் தாண்டியவன் (43). பேட்டி யின் இறுதியில் திரு பிள்ளையவர்கள் என்னை வைத்துக் கொண்டே துணை வேந்தரிடம் திரு ரெட்டியார் நல்ல புலமையுடையவர்; கடுமையான உழைப்பாளி. இவருக்கு இந்த வேலை மிகச் சிறியது. ரீடராகவாவது இருக்க வேண்டியவர். பிஎச். டி. க்குப் பதிவுபெற வழி இல்லாது திண்டாடுகின்றார். திருப்பதி இதற்கு நல்ல சூழ் நிலையை தரும் என்று கருதுகின்றேன். திருப்பதியில் தமிழ்த் துறையை முதுகலை ஏற்படுத்தும் முறை ஆய்வுபட்டங்களுக்கு வழிகானல் முதலியவற்றை வளர்ப்பதற்குப் பெருந்துணை புரிவார். இவரை எடுத்துக் கொள்வீராகில் பல்கலைக் கழகத்திற்குப் பேரும் புகழும் ஈட்டித் தருவார். என்றெல்லாம் சொன்னார். நானும் சில வினாக்களை விடுக்க