பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மலரும் நினைவுகள் இசைவு பெற்று, நான் வந்து சேர்ந்தால் தமிழ்த் துறையைத் தனியாக வைத்திருப்பீர்களா? தனியாக ஒரே விரிவுரையாளர் இருப்பதால் அதனை தெலுங்கு அல்லது வடமொழித் துறையுடன் இணைப் பீர்களா? வீடு கிடைக்குமா? நான் நடுத்தர வயது டையவன்; பேராசிரியர் பதவியிலிருப்பவன். சில ஆண்டு களில் முதல்வர் பதவி கிடைத்தாலும் கிடைக்கும். அதனால்தான் கவலைப்பட்டு இந்த வினாக்களை விடுத் தேன். மன்னித்தருளக’’ என்று கூறினேன். துணை வேந்தர், வந்து சேர்க, எல்லா வசதிகளும் வாய்ப்பு களும் உங்கட்குக் கிடைக்கும்.’’ என்று கூறினார். இதனை இன்று நான் வரலாற்றுப் புகழ் பெற்ற பேட்டியாகக் கருதுகின்றேன். ஏனென்றால், பேட்டி நடைபெறும் போதே நியமனம் உறுதி என்பது வெளிப் படையாகத் தெரிந்தது; வேலைக்கு விண்ணப்பம் போட்டவருக்கே வினாக்கள் விடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. திரு.தி.மு. நாராயணசாமி பிள்ளையை திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயில் திருப்பணிக் குழுவிற்குத் தலைவராகவும், சர். A. இராமசாமி முதலியாரை திருவரங்கம் திருக்கோயில் திருப்பணிக் குழுவின் தலைவ ராகவும் நியமனம் பெற்றதைச் செய்தித்தாள் மூலம் அறிந்தேன். ஜம்புகேசுவரம் திருப்பணி முடிந்து குட முழுக்கு விழாவின்போது ஒரு மலர் வெளியிட நினைத்து திரு. ச. தண்டபாணி தேசிகரைப் பதிப்பாசிரியராக நியமித்தார் திரு பிள்ளையவர்கள். திரு தேசிகர் திரு ரெட்டியார் அவர்கட்கு, வணக்கம். திருபிள்ளையவர்கள் உங்கள் கட்டுரையொன்று மலரில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். வைணவம் பற்றி எழுதவேண்டும் என்று விரும்புகின்றார்கள். காலம் குறைவாக இருப்பினும், சிரமம் கருதாது, தவறாது கட்டுரை விரைந்து அனுப்புக’’ என்று எழுதியிருந்தார்கள். நம்மாழ்வாரின் தத்துவம் பற்றி ஆய்ந்து டாக்டர் பட்டம்