பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ. நாராயணசாமி பிள்ளை 1 5 பெற்ற சமயம் அது. ஆழ்வார் பாசுரங்களை அடிப்படை யாகக் கொண்டு பல கட்டுரைகள் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வரும் சப்தகிரி (அப்போது இப் பெயர் இல்லை) என்ற திங்கள் இதழில் வெளி வந்து கொண்டிருந்தன. இதனால் வைணவம் பற்றி ஒரு பெரிய,ஆனால் அரிய, கட்டுரையொன்றை ஒரு வாரத்தில் அனுப்பிவைத்தேன். மலர் வெளி வந்த பிறகு என் கட்டுரையே மலரின் கண்ணாக-படிப்பவர்கள் பயன் பெறும் முறையில் - அமைந்துள்ளது என்று அறிஞர் பலர் பாராட்டியதாகத் திரு தண்டபாணி தேசிகர் எழுதியிருந்தார்கள். இக் கருத்தையே பெருவள நல்லூர் க. பத்மநாப ரெட்டியாரும் எழுதியிருந்தார்; நேரில் பார்த்த போதும் புகழ் மாலை சூட்டினார். திருப்பதியில் என் முன்னேற்றத்தைப் பதம் பார்ப்பதற்காகவே என்னைப் பிள்ளையவர்கள் கட்டுரை வரை யுமாறு பணித்தார்கள் என்று எனக்கு இப்போது தோன்று கின்றது. அவர் உள்ளம் உகக்குமாறு கட்டுரை அமைந்து விட்டதை அறிந்து மகிழ்கின்றேன். 1967-இல் தமிழ்ச் செல்வி, செந்தமிழ்ச் செல்வி, அணுக்கதிர், கலைக் கதிர், கழகத்தின் 1008-வது வெளி பீட்டு விழா மலர், பேராசிரியர் ஆர். கே. விசுவநாதன் {அண்ணாமலைப் பல்கலைக் கழக இயற்பியல் பேராசிரியர்) அவர்களின் மணி விழா மலர் ஆகியவற்றில் வெளியான பத்து அறிவியல் கட்டுரைகளைத் (பல் வேறு துறைகளைச்சேர்ந்தவை)தொகுத்து, அறிவியல் விருந்து' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெறச் செய்தேன். இந்த நூலை, பங்கயம் பூத்த நீலமால் வரைபோல் பணிமிசை பொவியராங்கேசன் துங்கமார் பாதம் மறந்திடா வுளத்தோன் து.ாயநல் அறநெறி காத்து