பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

]1 $ மலரும் நினைவுகள் மங்கலப் புகழைப் பெற்றவன்; வேழ வனத்திருப் பணிபுரி அன்பின் பங்கமில் நாரா யணப்பெரு நம்பி பதமலர்க் குரியதிந் நூலே. (வேழவனம்-திருவானைக்கா) என்ற பாடல்மூலம் திரு பிள்ளையவர்கட்கு அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். என் வாழ்நாளில் அன்பும் பரிவும் ஆதரவும் காட்டி வந்த தந்தையனைய பிள்ளையவர்கட்கு அன்புப் படையலாக்கினது எனக்கு மன நிறைவைத் தருகின்றது. 1969-மே வரையிலும் திருப்பதி பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சி குறித்து மானியம் பெற அனுப்பிய விண்ணப்பத்தின்மீது அதனைத் தொடர்ந்து பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பியும் ஒன்பதாண்டுகள் தமிழக அரசுக்கு அடியேன் காவடி எடுத்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரறிஞர் அண்ணா கோப்புகளில் பல உடன்பாட்டுக் குறிப்புகள் எழுதியும் அரசு நிர்வாக இயந்திரம் இயங்கவில்லை. நானும் அலுத்துப் போனேன்; மனத்தளர்வுற்றேன். இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பதவிக்கான விளம்பரம் வந்தது. என்மீது அன்பும் பரிவும் கொண்டு ஆதரவு அளித்து வந்த திரு. C.W.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் அவர்கட்கும் (செயலர், அழகப்பர் அறம்) திரு. தி. மூ. நாராயணசாமி பிள்ளையவர்கட்கும் கடிதங்கள் எழுதி என்னை விண்ணப் பிக்காது அழைப்பின்மூலம் ஆணை பிறப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருந்தேன். அவர்கள் இருவரும் விண்ணப்பம் அனுப்புமாறு பணித்தார்கள்; ஆவன செய்வ தாகவும் உறுதி கூறினார்கள். நான் இனி தமிழகத்திற்கு எந்தபதவிக்காகவும் விண்ணப்பிப்பதில்லை என்று எடுத்த சூளுரைக்கு மாறாக விண்ணப்பம் அனுப்பினேன். திரு. பிள்ளையவர்கள் மூன்று நாட்கள் தங்குவதற்கேற்ற வசதி களுடன் சென்னைக்கு வருமாறு எழுதியிருந்தார்கள்.