பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ. நாராயணசாமி பிள்ளை 夏? நானும் வந்தேன். இரண்டு மூன்று பெரியார்களிடம் என்னை இட்டுச் சென்று அவர்கட்கு அறிமுகம் செய்து வைத்து எனக்குப் பதவி கிடைக்கச் செய்ய வேண்டி னார்கள். ஆனால் திரு முத்தையவேளிடம் என்னை இட்டுச் செல்லவில்லை. அதற்குக் காரணம் ஏழுமலை யானுக்கே வெளிச்சம். இந்த ஆண்டு ஏப்பிரல்-மே மாதம் பேட்டி நடை பெற்றது. வேறு பல்கலைக் கழகங்களில் இருப்பது. போன்று வல்லுநர் குழுவிற்கு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் இடம் இல்லை. நியமனம் செய்வதற்கென்றே ஐவர் அடங்கிய நிரந்தரக் குழு ஒன்று இருந்தது. அதில் தாமரைச் செல்வர் நெ. து. சுந்தரவடிவேல் அவர்களும் இருந்தார்கள். அப்பொழுது பேராசிரியர் ஆதிநாராயணா என்பவர் துணைவேந்தராக இருந்ததாக நினைவு. இந்தக் குழுவிற்கு முத்தையவேள்தான் தலைவர். இரண்டு நாள் பேட்டி நடைபெற்றது. இருபதிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. எனக்குரிய பேட்டி இரண்டாவது நாள் நடைபெற்றது. அன்று முத்தையவேள் குழுவில் இல்லை; ஏதோ அவசர காரியமாக வெளியூர், செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். பேட்டிக்கு வந்தவர்கள் என் அநுபவம், வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, வெளியிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த முப்பத்தாறு நூல்கள் இவற்றைக் கண்டு எனக்குத் தான் இப்பதவி கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் ஆணை கைக்குக் கிடைத்து அதன்படி பணியில் அமரும் வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பொறுத்தவரை எதனையும் உறுதியாகச் சொல்ல முடியாறு என்றும் சொன்னார்கள். கிடைக்கும் போலிருந்து ஏமாற்றம் அடைந்தவர்கள் பலர் என்றும் கூறிச் சிரித்தார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா (புறம்-192) என்ற ஆன்றோர் வாக்கை நினைத்துக் கொண்டேன். ம நி-2