பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் நினைவுகள் o 8 பேட்டி நன்முறையில் நடைபெற்றது. குழு கேட்ட வினாக்கள், அவற்றிற்கு நான் மறுமொழி அளித்த முறை, நான் கொண்டு சென்ற 36 நூல்கள், ஐம்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவை எனக்குக் சாதகமாக இருப்பன போல் தோன்றின. பேட்டி முடிந்து குழு கலையும்போது என்னை வெளியில் கண்ட திரு நெ. து. சுந்தரவடிவேலு என்னைக் கை குலுக்கினார். நானும் இது கிடைப்பதற் கான அறிகுறி என்றே கருதினேன். இரண்டு திங்கள் கழிந்தும் எந்தவித தகவலும் இல்லை. ஒருநாள் சென்னை வந்து திரு முத்தையவேளை அவர் திருமாளிகை யில் சந்தித்தேன். அவரது விருந்தோம்பல் ♔ തേ,ു . கையைத் தோளின் மீது போட்டுக் கொண்டு அன்பாகவும் ஆதரத்தோடும் பேசிய முறை துறையூர் பக்கம் சில அன்பர்களின் பெயர்களைச் சொல்லி அவர்கள் பற்றி உசாவிய முறை இவையெல்லாம் என்னை வியக்கச் செய்தன; திக்கு முக்காடவும் செய்தன. தாம் இதை அவசியம் கவனிப்பதாக விடை கொடுத்தனுப்பினார். பிறகு எந்தத் தகவலும் இல்லை. சூளுரைக்கு மாறாக நான் விண்ணப்பித்தது தவறு என்பதை என் உள்ளம் உறுத்தியது. ஏழுமலையான் தடுத்து ஆட்கொள்வான் என்பதை அப்போது அறியாவிடினும் அடுத்த ஆண்டு அறிந்து கொண்டேன். ஓராண்டுவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அந்தப் பேராசிரியர் இடத்தை நிரப்பாமல் வைத்திருந்து அடுத்த ஆண்டு அழைப்பின் மூலம் டாக்டர் வ. சுப. மாணிக்கத்தை நியமனம் செய் தார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி யாற்ற வாய்ப்பு இல்லையெனினும் திரு முத்தையவேளின் உயர்ப் பண்புகளையெல்லாம் நேரில் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் மனம் நிறைவு பெற்றேன். நான் திருப்பதியில் பணியாற்றத் தொடங்கிய நாள் முதல் டாக்டர் மு. வரதராசன் (அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) திருவேங்கடவன்