பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ. நாராயணசாமி பிள்ளை | 9 பல்கலைக் கழகத் தமிழ்ப் பாட நூல் குழுவின் (Board of Studies in Tamil) தலைவராக இருந்து வந்தார். ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியரே குழுவின் தலைவராக இருக்க வேண்டுமென்பது அப்போதைய விதி. நான் 1970-முதல் ரீடராகவும் துறைத் தலைவராகவும் ஆன பிறகும் கூட இந்த விதி மாற்றப் பெறவில்லை (1975-ல் டாக்டர் எஸ். சச்சிதானந்த மூர்த்தியவர்கள் துணை வேந்தராக நியமனம் பெற்ற பிறகு இந்த விதி மாற்றப் பெற்றது. நான் குழுவின் தலைவரானேன்), டாக்டர் மு.வ. திருநாடு அலங்கரித்தார் (1974). குழுவின் காலம் முடிய இன்னும் ஒராண்டு உள்ளது. திரு. தி. மு. நாராயணசாமி பிள்ளை பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடக் குழுவில் தலைவராக இருந்தமையைக் கூறி அவரை ஓராண்டுக் காலத்திற்குக் குழுவின் தலைவராக நியமிக்குமாறு பல்கலைக் கழகத் திற்குப் பரிந்துரைத்தேன். துணைவேந்தர் டாக்டர் D. ஜகந்நாதரெட்டி அவர்களையும் பார்த்துப் பேசினேன். என் விருப்பப்படியே திரு. பிள்ளையவர்கள் குழுவின் தலைவராக நியமனம் பெற்றார்கள். பல்லாண்டுக் காலம் பல பொறுப்புக்களில் இருந்த திரு பிள்ளையவர்களால் என்னை ஒரு நல்ல பதவியில் அமர்த்த முடியவில்லை; இப்படிச் சொல்வதைவிட எனக்கு அப் பெருமகனாரின் உதவியைப் பெறும் ஊழ் இல்லை என்று சொல்லுவது பொருந்தும். ஆனால் அப்பெருமானுக்கு உதவுவதற்கு சிறியேனாகிய என்னால் முடிந்தது; இப்படிச் சொல்லு வதைவிட திருவேங்கடவன் திருவருள் எனக்குத் துணை நின்றதால்-ஏன்? அவரிடம் அவ்வருள் பாய்ந்ததால்அவர் ஏழுமலையானைச் சேவிக்கும் பேறு பெற்றார் என்று சொல்லலாம். குழுவின் கூட்டத்திற்கு நாள் குறிக்கப் பெற்றது. திரு பிள்ளையவர்கள் தாம் வரும் இருப்பூர்தி பற்றிய விவரங் கள் குறித்து எழுதியிருந்தார்கள். வயது ஏறியதன் காரண