பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 {} மலரும் நினைவுகள் மாக உடல்நிலை மிகவும் தளர்ந்திருந்தது. ஓர் ஆள் துணையுடன்தான் வந்திருந்தார்கள். நானும் திரு P. செளரிராசனும் நிலையத்திற்குப் போயிருந்தோம் அவரை வரவேற்க. பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை யின் கட்டட வேலை பூர்த்தியடையாததால் திரு பிள்ளை யவர்களை பீமா விடுதியில் (காந்தி சாலையிலுள்ளது) இடம் பிடித்து அதில் தங்க வைத்தோம். மாடிப்படி ஏறு வதில் கூட சற்றுச் சிரமப்பட்டார். எனக்கு இதைப் பார்ப் பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அறையை அடைந்: ததும் பணப்பையைத் தவற விட்டதை அறிந்தார். ரூ.300/- அதில் இருந்ததாம். எவ்வளவோ முயற்சி எடுத்தும் அது கிடைக்கவில்லை. மறுநாள் முற்பகல் பாடத்திட்டக் குழுவின் கூட்டம் முடிந்தது. குழுவினருக்குப் பீமாவில் விருந்தொன்று கொடுத்தேன். திரு பிள்ளையவர்கள் அப்பளம், ரசஞ்சாதம், பாயசம் இவற்றைத் தவிர எதை யும் உண்ணவில்லை. உணவு முறையில் மிகக் கவனமாக இருப்பதைக் கண்டேன். அன்று மாலை ஒய்வு. மறுநாள் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு சிற்றுந்தை, (Wan) வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றோம். சேவை மிக நன்றாக அமைந்தது. திரு பிள்ளையவர்கள் இறையதுபவத்தில் நன்கு தோய்ந்து விட்டார்கள்; தம்மை மறந்த நிலையில் வேங்கட. வாணனைச் சேவித்தார்கள், பகலுணவிற்கு விடுதிக்குத் திரும்பி விட்டோம். உணவிற்குப் பிறகு ஒய்வு. மாலை 6. மணிக்கு இருப்பூர்தியில் அனுப்பி வைத்தோம். திருப்பதி பயணம், ஏழுமலையானின் சேவைட இவற்றால் பெற்ற மனநிறைவோடு ஊர் திரும்பினார்கள். 工 鼩 砷 இதன் பிறகு நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் என் அரிய நண்பர் திரு அரங்கசாமி ரெட்டியாரைப் பார்க்க சென்னை காஸ்மாபாலிடன் விடுதிக்குச் செல்வ.