பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மு. தாராயணசாமி பிள்ளை 2 : துண்டு. அப்போதெல்லாம் சில சமயம் திரு பிள்ளையவர் களையும் அங்குக் காண்பேன். அளவளாவுவேன். 1977அக்டோபரில் ஒய்வு பெற்ற பிறகு மூன்று மாதம் திருப்பதி யில் தங்கியிருந்தேன். 1978-சனவரி 1கதி-முதல் சென்னை யில் குடியேறினேன். இந்த ஆண்டு பிப்பிரவரி முதல் கலைக் களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாளராக நியமனம் பெற்றேன். பதினைந்து மாதங்கள் இப்பணி யில் இருந்தேன். அதன் பிறகு அத்திட்டம் கைவிடப் பெற்றது. அலுவலின்றி சும்மா இருக்கின்றேன். இக் காலத்தில்தான் திரு பிள்ளையவர்கள் திருச்சியில் இருந்த போது திருநாடு அலங்கரித்த செய்தியைச் செய்தித்தாள். மூலம் அறிந்து வருந்தினேன். அவருடைய அருமைத் திரு மகன் கேப்டன் T. N. இராமசாமிக்கு இரங்கல் கடிதம் எழுதி அவருடைய துக்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். திரு பிள்ளையவர்கள் வைகுந்தத்தில் நித்தியசூரிகளு டனும் முக்தர்களுடனும் திருவாய்மொழி காலட்சேபம் கேட்டு மகிழ்ந்திருப்பார்கள் என்று என் மனம் இப்போது எண்ணுகின்றது.