பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

← Ꮾ Ꮾ மலரும் நினைவுகள் யும் விளக்கினார். சரியாக பகல் இரண்டு மணிக்குத் திரும்ப வீடு வந்து சேர்ந்தோம். நினைவு-3: சா.க.சிறந்த நாட்டுப் பற்றாளர்; காந்தி யடிகள் காட்டிய வழியைக் கடைப் பிடிப்பவர். இராஜாஜி யைத் தென்னாட்டு காந்தி என்று சொல்வதைப்போல் இவரைக் காரைக்குடி காந்தி-செட்டிநாட்டுக் காந்திஎன்று சொல்வார்கள். 1952 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இவரை வேட்பாளராக நிறுத்த மறுத்து விட்டது. பலர் வேண்டுகோட் கிணங்கவே தேர்தலில் நிற்க இவருக்கு விருப்பம் ஏற்பட்டது. காங்கிரசு கட்சி மேலிடம் இவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக் காதது மிகவும் வருந்தத்தக்கது. பல்குழு, உட்பகை, குறும்பர்-இவை இல்லாத நாடே நல்ல நாடு என்பர் வள்ளுவப் பெருந்தகை. இந்த மூன்றும் கட்சி அரசியல் நடைமுறையிலிருக்கும் இக்காலத்தில் கட்சிக்குள்ளேயே புகுந்து புற்றுநோய்போல் அரித்துத் தின்கின்றன: எல்லாக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். இதனால் இவர் காங்கிரகக் கட்சியை விட்டு விலகி சுயேச்சை வேட்பாள ராக நிற்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. கையூட்டும் நேர்மையின்மையும் மலிந்து தேர்தல் குற்றங்கள் தலை தூக்கி நிற்கும் இக்காலத்தில் வாக்காளர்கள் தாயக் கோட்டில், அல்லது சதுரங்க விளையாட்டில், நகர்த்தப் படும் காய்கள் போல் தேர்தல் சாவடிக்கு நகர்த்தப்படு வதைக் காணும்போது நல்லறிஞர்கள் வருத்தப்படு கின்றனர்; சமூகத்தின் ஒழுக்கம் ஆடிக்காற்றில் அலைக் கழிக்கப்படும் பட்டம்போல் சீரழிந்து வருவதைக் காண்ப வர்கள் நாணித் தலை குனிகின்றனர். இவர் நின்ற தேர்தலில் நடைபெற்ற தேர்தல் குற்றங்கள்- காரைக்குடி நகராண்மைக் கழக ஆட்சிக்குட் பட்ட இடங்களில் - நினைவிற்கு வருகின்றன. ஆண் களுக்குப் பத்து ரூபாய், உணவுப் பொட்டலங்கள்: பெண்