பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 397 களுக்கு சின்னாளப்பட்டி சேலை ஒன்று, கையில் இரண்டு ரூபாய் வழங்கப்பட்டன. பெண்கள் வாக்குகளை உறுதிப் படுத்த எதிர்க்கட்சி ஏஜெண்டுகள் மேற்கொண்ட முறை கவிஞர்களின் கற்பனைக்கும் எட்டாதது. பள்ளிகளுக்கு அமெரிக்க அரசு ஏழைப் பிள்ளைகட்கென வழங்கப்பட்ட பால் பொடியைத் தவறான முறையில் பெற்றுப் பாலாக்கி அதில் பெண்கள் தாலியை மூழ்கச் செய்து நான் இத் தாலியின் ஆணையாக உங்கள் கட்சிக்கு வாக்கு அளிப்பேன்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சின்னாளப்பட்டி சேலையொன்றையும் ஓர் இரண்டு ரூபாய்த் தாளையும் தந்ததை நேரில் பார்த்து வியந்து போனேன். எல்லாக் கட்சிகளும் காரைக்குடி காந்திக்கு ஒத்துழைத் தன. பொதுவுடைமைக் கட்சியினர் வந்து "அண்ணே, வாக்காளர்க்கு வழங்கப்பெறும் ரூபாய்த் தாள்கள் புதியவை; ஒரே வரிசை எண்களைக் கொண்டுள்ளன. ஒரே வங்கியில் வாங்கப்பட்டவை. தாங்கள் இசைவு அளித் தால் நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி ரூபாய்த்தாள் கட்டுகளைப் பறித்து வந்து விடுகின்றோம். தேர்தலையே நிறுத்தி விடுகின்றோம்' என்று கேட்டார்கள். அதற்கு இப்பெருமகன், அங்ங்னம் செய்ய வேண்டா. ஏழை மக்களின் வருவாயைக் கெடுக்க வேண்டா. அப்படி அவர்கள் வருவாயைப் பெற்றாலும் அவர்களின் பெரும் பான்மையோரின் வாக்கு நமக்குத்தான் வரும். அப்படி வராமல் நான் தோற்றாலும் மகிழ்வேன். நீங்கள் அதற்குத் தடையாக வேண்டா' என்று கூறினபோது இவரது நல்லுள்ளம் என்னை வியக்க வைத்து விட்டது. தேர்தலில் 2000/- வாக்குகள் வேற்றுமையால் தோற்றார். ஆனால் தோல்வியையும் வெற்றியையும் ஒன்றாகப் பாவிக்கும் இவர் பேருள்ளம் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும் சேக்கிழார் கூறும் சிவனடியாரின் பேருள்ளத்தை ஒத்திருந் ததைக் கண்டு வியந்து போனேன்.