பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 3 ö Ꮽ புடன் வரவேற்றனர். சட்டை போடாவிட்டாலும் மடிப்பு கலையாமல் போட்டிருந்த கதர் அங்கவஸ்திரம் அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. வைத்த கண் வாங்காமல் உற்று நோக்கி வியந்த வண்ணம் இருந்தனர். திருமண நிகழ்ச்சி தொடங்கியது. ஹோமம் வளர்க்கப் பெற்றது; திருமுறை யில் சில பாடல்களையும் வேறு சில பாடல்களையும் நாவி னால் நவிற்றி திருமணத்தை அற்புமாக முடித்து வைத்தார். வேறு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே எங்கள் இருவருக்கும் மாணவன் பெரிய தந்தையார் வீட்டில் அமுது படைக்கப்பட்டது - நாங்கள் திருச்சியிலிருந்து பகல் 1-30க்குக் கிளம்பும் இருப்பூர்தியைப் பிடிக்க வேண்டும் என்று கருதியதால். வீட்டில் நுழையும் போதே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கவிஞர் பாரதிதாசன் இவர்தம் திருவுருவப்படங்கள் சா. க. வின் கண்ணில் பட்டன. "பையன் தி. மு.க. வைச் சேர்ந்தவன் போலத் தோன்றுகின்றது” என்றார். உண்மை அதுவாக இருந்தாலும் யார் வீடோ அது? பையன் காங்கிரசுக் காரன் என்று சொல்விச் சமாளித்துக் கொண்டேன். உணவு முடிந்து உரிய காலத்தில் திருச்சி வந்து மாலை 5-15க்குக் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். நினைவு-5 : அக்காலத்தில் தினமணி-ஞாயிறு" மலரில் கலிங்கத்துப்பரணிபற்றி என் ஐந்து கட்டுரைகள் வெளி வந்திருந்தன. மேலும் நான்கு கட்டுரைகள் எழுதிக் காரைக்குடி செல்வி பதிப்பகத்தின் மூலம் கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டேன். என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படச் செய்தும், மேலும் படிக்கவும் வாய்ப்பு பெறச் செய்தும், வரும் இடையூறு களைத் தடுத்து நிறுத்தியும், இன்னும் பல்வேறு வகையில் உதவியும் திருவருள் பாவித்தவர் விநாயகப் பெருமான் என்பது என் திடமான நம்பிக்கை, அந்த எம்பெருமானே