பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.0% மலரும் நினைவுகள் சா. க. வடிவத்தில் எனக்கு உதவினார் என்பதும் என் நம்பிக்கையுமாகும். எந்த ஒரு புதிய பொருளையும் விநாயகப் பெருமானுக்கு முதலில் படைப்பது ஒருவித மரபு. காரைக்குடி வாழ்வில் முதல் நூலாக (மார்ச்சு1957) வந்த இதனை, தீந்தமிழ் அன்னைக்கு இனியநற் புதல்வன்; செம்மையில் பிறழ்ந்திடா உளத்தன்; காந்திஎம் பெருமான் நெறிவழி நிற்போன்; கல்சொலும் கதையுணர் அறிஞன்; சாந்தமார் முப்பால் வாசகம் சுவைப்போன்; தண்டமிழ் கம்பனுக்கு அடியான்: மாந்தருள் சிறந்தோன் கணேசனாம் எங்கள் வள்ளலுக்கு உரியது.இந் நூலே. என்ற பாடலின்மூலம் அன்புப் படையலாக்கி மகிழ் கின்றேன்.இந்தப் படையலின்கனமே வரிசை வரிசையாகப் பலப்பல நூல்கள் எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் காரணமாக அமைந்தது என்பதை என் உள்ளம் நம்பு கின்றது. நினைவு-6 : எந்த நூலை எழுதினாலும் ஒரே அளவு, ஒரே மாதிரியான நல்ல தாளில் என் கைப்படிகள் அமையும். செய்வன திருந்தச்செய்" என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழும். சா. க. வுடன் பழகின பிறகு, இயல்பாக என்னிடம் அமைந்துள்ள இப்பண்பு மேலும் மெருகேறியது. எந்த நூலாக இருந்தாலும் அவற்றின் கைப்படியைத் திரு. சா. க.வின் பார்வைக்கு வைப்பேன், எழுதிக் கொண்டிருக்கும்போதும் அவற்றின் அமைப்பு பற்றி அவருடன் கலந்து யோசிப்பதுண்டு. அருமையான திருத்தங்களைச் சொல்வார்; அற்புதமான யோசனை களைக் கூறுவார். பெரும்பாலும் எல்லாத் துறைகளிலும்,