பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 3 ] I மனம் கலந்து உரையாடும் திறன் படைத்த ஓர் அபூர்வ மனிதராகத் திகழ்ந்தார் சா. க. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (குறள்-783) என்ற வள்ளுவப் பெருமானின் வாக்கின் உண்மையை நான் இவரிடம்தான் கண்டேன். காரைக்குடியில் பணியேற்ற அன்றே தமிழ் பயிற்றும் முறை பற்றி ஒரு பெரு நூல் எழுதவேண்டும் எனத் திட்டமிட்டேன். தாய் மொழியைப் பயிற்றும் முறைகள் பற்றிய ஆங்கில நூல்கள், கல்வி, உளவியல் பற்றிய நூல்கள், பல பேரறிஞர்கள் தனித்தனி பொருள் பற்றி ஆராய்ந்து எழுதிய நூல்கள் இவற்றையெல்லாம் ஆழ்ந்து கற்றேன். இவற்றில் குறிப்பு களை எடுத்து வகுப்பில் கற்பித்தலில் கையாண்டேன். இந்தப் பயிற்சியால் கருத்துகள் தமிழில் நல்ல சொல்லும் திறமையை அடைந்தன. இங்ங்னம் அநுபவத்தால் எழுதப் பெற்றதே தமிழ் பயிற்றும் முறை' என்ற என் பெரிய நூல். இது அச்சாக வேண்டுமே. ஏழைப் பெண் ஒருத்தி குழந்தையைச் சுமந்து கொண்டு பேருந்து நிலையங்களிலும், இருப்பூர்தி நிலையங்களிலும் பிச்சைக் காகக் கையேந்தி நிற்கும் நிலைதான் என் போன்ற எழுத்தாளர் நிலையும். ச. கா.விடம் இதனைக் காட்டி அச்சில் இந்நூல் வெளிவர உதவ வேண்டும் என்று வேண்டி னேன். கவனிப்போம் என்றார். விநாயகர் மனம் வைத்தால் விக்கினங்கள் யாவும் தீயினில் துரசாகும். அன்றோ? அந்த ஆண்டுக் கம்பன் திருநாளுக்கு திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை என்ற வெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் S. R. கூத்தநயினார் வந்திருந் தார்; அவருக்கு நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டரும் கம்பன் திருநாளில் கலந்து கொள்ள வந்திருந்தார் (1956-கம்பன்