பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மலரும் நினைவுகள் திருநாள் என்பதாக நினைவு). சா. க. கூத்தநாயினாரைப் பார்த்து, அப்பா கூத்து, திரு. ரெட்டியார் ஆறாண்டுகள் சிரமப்பட்டு தமிழ் பயிற்றும் முறை” என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கியிருக்கின்றார். இதனை நீதான் போட வேண்டும் என்பது என் ஆசை. இந்த வெளியீட்டால் உன் நிறுவனத்திற்குப் பேரும் புகழும் வந்து சேரும். உடனே போடுக' என்று கூற, அவரும் போடுவதாக ஒப்புதல் தெரிவித்தார். மறுநாளே கைப்படியை அவரிடம் சேர்த்தேன். 1957-அக்டோபரில் நூலும் அச்சாகிப் பெரும் புகழுடன் நடைபோடத் தொடங்கிவிட்டது. சா.க. வின் துணையில்லாவிடில் இந்த நூல் வந்திருக்க முடியாது. இதன் மூன்றாவது பதிப்பும் (செப்டம்பர், 1980) வெளிவந்து படிகள் தீர்ந்துவிட்டன. இது மணிவாசகர் நூலகத்தார் (சிதம்பரம்) வெளியிட்டனர்; நான்காவது பதிப்பு வெளிவர இறைவன் அருள்வேண்டும்: இந்த நூலின் சிறப்பினைப் புலவர் இரா. திருமுருகன் (புதுச்சேரி) என்பார், ஆசிரியப் பணியாற்றி அறிந்த வெல்லாம் ஐந்தரிய நூலாகத் தந்தார் மண்மேல்; ஆசிரியப் பணியிருக்கும் வரையி ருக்கும் அவர்படைத்த தமிழ் பயிற்று முறை'யின் கீர்த்தி!ச என்று புகழ்மாலை சூட்டுவார். நினைவு-7 : "தமிழ் பயிற்று முறை வெளி வந்த சமயத்தில் அறிவியல் பயிற்றும் முறை” என்ற நூலும் தயாராயிற்று. இதனையும் உருவானது முதல் முடியும் வரை கவனித்தார். பத்துத் திங்களில் ஒரே மூச்சில் முடிக்கப்பட்டது. மூலம் ஆங்கில நூல்களாதலால் அந்தக் 5. ஆசிரியரின் விட்டுசித்தன் விரித்தமிழ் (சிறப்புப் பாயிர மாலை-22) காண்க.