பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 # 8 மலரும் நினைவுகள் கண்ணனைய பெருங்கோயில் கண்ட நம்பி! கலைத்தமிழுக் குணர்வளிக்கும் புனித நம்பீ! தண்ணமுதம் எனக்குளிர்ந்த உள்ள நம்பீ! சால்புநிறை நின்வரவால் உயர்ந்தோம் வாழி! மாதகவார் காந்தியருள் நெறியில் ஏ.கி மாசற்ற சத்தியத்தின் சுடரைக் கண்டாய்! போதமுறு பாரதியின் வதன சோதிப் பொலிவினால் இலக்கியத்தின் நுட்பங் கண்டாய்! கோதகன்ற ராஜாஜி நட்பி னாலே கொள்கையினில் தளராத உறுதி கண்டாய் ஏதமிலாச் சுகமுடைய கணேச நம்பீ! இவற்றாலே தமிழகத்தின் தீப மானாய்! செந்தமிழ்த்தாய் ஒருகோடி யாண்டு செய்த செழுந்தவத்தின் பயனான கம்ப நாடன் சந்ததமும் புரிந்திட்ட நோன்பி னாலே தகவுடனே அவதரித்தாய்! கலைஞர் கோவே! முந்துறயாம் பகர்ந்தமொழி முகமன் அன்று மூவாத தமிழகத்துப் பட்டி மன்றம் சிந்தை நிறை கவியரங்கம் கம்ப னுக்குத் திகழ்கின்ற பதிப்புக்கள் யாவும் சாட்சி, சிற்பத்தில் கல்வெட்டில் புனிதப் பண்ணில் சீர்மிக்க சொல்லாய்வில் மருத்து வத்தில் கற்பனையின் முதிர்ச்சிவளர் கவிதை யாய்வில் கம்பனடிப் பொடியே! நின் ஒப்பா ரில்லை. பொற்புறுநின் முற்றத்தில் சிந்தும் சொல்லைப் பொலிவுடனே தொகுத்தவர்கள் டாக்டராகி முற்பட்ட புகழ்பெறுவர் கவிஞர் கோவாய் மூவாத கம்பனுக்கே அடிமை யாவார். மங்கலமார் கம்பனடிப் பொடியே! நீங்கா மகிழ்வுடன்நீ புரிதொண்டு முற்றும் கண்டோம்