பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 3.19 பொங்குமனக் களிப்புற்றோம்; இதயத் தாலே புகழ்மிக்க தமிழ்த்தாய்க்கு வடிவம் தந்தாய் கங்கையெனச் சிறப்புறுக; வேங்க டத்தில் கருணையே வடிவாக மேவு கின்ற பங்கயக்கண் எம்பெருமான் அருளி னாலே பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! [கம்பராமன்-S.K. இராமராசன் பாடியது1. இந்தப் பாடல்களை டாக்டர் P செளரிராசனால் இசையுடன் பாடப் பெற்று சா.க.வுக்கு வரவேற்பு நல்கப் பெற்றது. இங்ங்னமே தெலுங்கில் கணிதப் பேராசிரியர் Dr. P.W.அருணாசலம் அவர்களால் பாடல்கள் தயாரிக்கப் பெற்று அவராலேயே இசையுடன் பாடப் பெற்று திரு B. கோபால்ரெட்டிக்கு வரவேற்புரை வழங்கப்பெற்றது. 1977-அக்டோபரில் ஒய்வு பெற்று மூன்று திங்கள் திருப்பதியில் தங்கியிருந்தேன். 1978 சனவரி 14 முதல் சென்னையில் குடியேறி விட்டேன். ஒருமுறை இராசேசுவரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் சா. க. வைக் கண்டு உரையாடி மகிழ்ந்தேன். அதன் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. உடல்நிலை குன்றி கோவையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகச் செய்தி எட்டியது. சில நாட்களில் அவர் திருநாட்டை அலங்கரித்த செய்தியும் தொடர்ந்து வந்தது. மிகவும் வருந்தினேன். ஆனால் என் வாழ்வில் ஒரு திருப்பத்தை விளைவித்த விநாயகப் பெருமான் சா. க. வடிவத்தில் நிலையாக என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளார். இனி எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் என் உள்ளத்தில் நிலையாக இடம் பெற்றிருப்பார். தோற்றம் : 6-6-1908 முத்தி : 28-7-1982