பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பேராசிரியர் ஆ. முத்துசிவனார் ஆ. முத்துசிவனார் காரைக்குடி அழகப்பா கல்லூரி தொடங்கப்பட்டகாலத்திலேயே முதல் தமிழ்ப்பேராசிரியராக நியமிக்கப் பெற்றவர். கம்பனடிப் பொடியின்பேரன்பிற்கு இலக்கானவர். அக்காலத்தில் பி. ஏ. வகுப்பில் சிறப்புத் தமிழ் உள்ள கல்லூரியில்தான் தமிழ்த் துறைக்குப் பேராசிரியர் பதவி உண்டு. கல்லூரி தொடங்கப் பெற்றபோது ஆங்கிலம், தமிழ், இயற்பியல், கணிதம் போன்ற பல துறைகட்கும் பேராசிரியர்களின் நியமனத்திற்கும் ஆணைகள் தயாரிக்கப் பெற்ற போது தமிழ்த் துறையிலும் சிறப்புத் தமிழ் இருப்பதாகக் கருதி தயாரித்துவிட்டார் எழுத்தர்; கையெழுத்தும் ஆகி ஆணை களும் உரியவர்களைச் சென்றடைந்தன, பின்னர் தவறு தெரிந்தது. கல்லூரி நிர்வாகம் தமிழ்ப் பேராசிரியருக் குரிய ஆணையை மாற்ற நினைத்தது. கம்பனடிப்பொடி குறுக்கிட்டு, மாற்ற வேண்டா; தவறாகப் பிறப்பிக்கப் பட்ட ஆணையாயினும், கல்லூரியில் தமிழ் வளர்ச்சி பெற. வேண்டும் என்பதற்கு இது சூசகமாக அமைந்து விட்டது. அப்படியே இருக்கட்டும்’ என்று தடுத்துவிட்டார். இப்படி யாக திரு. ஆ. முத்துசிவனாருக்குப் பேராசிரியர் பதவி வந்து சேர்ந்தது. காரைக்குடிக்கு வருவதற்கு முன்னர் திரு. முத்து சிவனார் திருநெல்வேலியிலிருந்தார். அப்போது டி.கே.சி. யின் வட்டத் தொட்டியில் தொடர்பு கொண்டிருந்தார்.