பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவனார் ö2蕨 டி.கே.சியின் கவிதை மோகம் இவரையும்பற்றிக் கொண் டிருந்தது, சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்.டி.கே.சி.யின் கவிதைக் கொள்கையை முழுமூச்சுடன் பரப்பியவர். மேனாட்டு முறையில் அமைந்த இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளை தம் பேச்சாலும் எழுத்தாலும் முதன் முதலாகப் பரப்பி வந்தவர் முத்துசிவனார். தலையிலுள்ள வழுக்கையை மறைக்கக் கதர் குல்லாய் அணிந்திருப்பவர். கதர்க்குல்லாயுடன் அழகிய முகத்தோற்றம் - சுந்தர வதனம்-பாடலை இசையுடனும் கையசைவுடனும் பாடும் பாணி, நல்ல குரல் இவையனைத்தும் கண்டாரை யும் கேட்பாரையும் ஈர்க்கும் பெற்றியுடையவை. பாடலை அநுபவித்துப் பாடும்போது கேட்போருக்குக் கல்கத்தா ரச குல்லாவைச் சுவைப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படும். பேச்சு நடையும் டி.கே.சியின் பாணியில் அமைந்திருக்கும். நான் காரைக்குடியில் பணியேற்றபோது ஜப்பார் மருத்துவமனையருகிலுள்ள ஒர் இல்லத்தில் குடியிருந்தார்: அங்குத்தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன்.அந்த இடத்திலிருந்துதான் கல்லூரிக்கு இட்டுச் செல்லும் பேருந்தில் ஏறுவார். ஒன்றிரண்டு ஆண்டுகளில் கல்லூரி வளாகத்திலேயே இல்லம் அமைந்து விட்டது. வார விடுமுறை நாட்களில் சா. க.இல்லத்தில் இவரைப் பார்க்க லாம். பழகுவதற்கு இனியர்; எவருடனும் புன்முறுவல் தவழும் இன்முகத்துடனும் மிக எளிமையாகப் பழகும் பண்புடையவர். ஜஸ்டிஸ் மகராசனுக்கு மிக நெருங்கிய நண்பர். டி.கே.சி.யின் வட்டத்தொட்டி பலரைப் பிணைத்து வைக்கும் ஒரு சிறந்த கருவியாகத் திகழ்ந்தது. 1950-ஜூனில் நான் பல நிலைகளில் பங்கு கொண்டு முன்னின்று தொடங்கி வைத்த உயர்நிலைப் பள்ளி வைரிச் செட்டிப் பாளையத்திலுள்ள விவேகாநந்தா வித்யாலய உயர்நிலைப்பள்ளி. திரு. S. R. நாக ரெட்டியார் பொறுப்பில்நடை பெற்று வந்த உயரிநிலைப் பள்ளி.பள்ளி ம நி-21