பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.22 மலரும் நினைவுகள் தொடங்கப் பெற்ற ஆண்டு முதலே திரு நாக ரெட்டியார் பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி விட்டார். அதற்கு முன்னரே நூலகம்-வாசக சாலையின் ஆதரவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து திறமையுடன் நடத்தி வந்தவர். நான் காரைக்குடி சென்ற நான்கு திங்களில் பள்ளியில் கவியரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். காரைக்குடியிலிருந்து பேராசிரியர் ஆ. முத்துசிவனார், திரு க. தேசிகனார், திரு பூ அமிர்தலிங்கனார், நான் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டோம். செவந்தாம் பட்டி பெ. இராமாநுஜ ரெட்டியார், வேலூர் S. K. இராமராசன் முதலியோரும் இதில் கலந்து கொண்டனர். திருச்சி வரையில் இருப்பூர்தியில் சென் றோம். திருச்சியிலிருந்து மகிழ்வுந்தில் வைரிச்செட்டிப் பாளையம் சென்றோம். கருத்தரங்கம் பேராசிரியர் முத்துசிவனார் தலைமையில் நடைபெற்றது. அன்று மாலை நிகழ்ச்சிகள் முடிந்தன. இரவு நல்ல விருந்து. அடுத்த நாள் திரு நாகரெட்டியார் புளியஞ் சோலைக் குப் பயணப்படுத்தினார். காலை சிற்றுண்டி முடிந்ததும் சுமார் எட்டு மணிக்கு எங்களை வில்வண்டியொன்றில் அச்சோலைக்குக் கூட்டிச் சென்றார். இன்னொரு வண்டி யில் வர்க்க அன்ன வகைகளும் வேறு சில பொருள்களும் சில ஆட்களுடன் வருவதற்கு ஏற்பாடு செய்தார். சுமார் 9.30க்குள் புளியஞ் சோலையைச் சென்றடைந்தோம். ஓங்கி உயர்ந்த மரங்கள் சூழ்ந்த சோலை; கதிரவன் தலை காட்ட முடியாத பரந்து பரவிய மரங்கள். மரங்களின் அடியில் வெள்ளத்தில் மலையினின்றும் உருண்டு ஓடி வந்த வழுவழுப்பான பெரிய கருங்கற்கள்; இடையிடையே சிறு கற்கள் செறிந்து கிடந்த காட்சி. கற்களுக்கிடையே ஊற்று நீர் சிற்றொலியுடன் ஒடிச் சென்ற காட்சி. இவை யாவும் எங்களது சிந்தைக்கும் செவிக்கும் கண்ணுக்கும் நல் விருந்தாக அமைந்தன.