பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவனார் 323 கம்பனில் தோய்ந்த முத்துசிவனாருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இயற்கைக் காட்சியில் உள்ளத்தைப் பறி கொடுத்த பேராசிரியர், ஒங்கிமரன் ஓங்கிமலை ஓங்கி மணல் ஓங்கிப் பூங்குகுலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மித் தூங்குதிரை யாறு தவழ் சூழலதோர் குன்றின." என்ற கம்பராமாயணப் பாடலைப் பலமுறை இசை யேற்றிப் பாடத்தொடங்கி விட்டார். இராமனுக்கு வில் முதலியவற்றை ஈந்த பிறகு அகத்தியர் இராமன் முதலியோருக்கு விடைகொடுத்துப் பஞ்சவடியில் தங்கி யிருக்குமாறு பணிக்க, இராமன் முதலியோர் பஞ்சவடிக் கும் செல்லும் வழிபற்றிக் கூறுவது இப்பாடல். பஞ்சவடி என்பது கோதாவரி நதிக்கரையில் ஐந்து ஆலமரங்கள் தொகுதியாகச் சூழ்ந்திருந்த இடம். முத்துசிவனார் இப்பாடலைப் பாடப்பாட நாங்கள் புளியஞ் சோலையை விட்டு பஞ்சவடிக்குப் போனதாகவே நினைத்து மகிழ்ந் தோம். புளியஞ்சோலைக் காட்சி பஞ்சவடிக் காட்சியை நினைக்கச் செய்தது ஒருவித இலக்கிய அநுபவம். கற்களின் மீது அமர்ந்து நாற்புறமுள்ள காட்சிகளை அநுபவித்துக் கொண்டிருந்த போது எங்களைத் திடீரென்று சிறையிருந்த செல்வி சீதாப்பிராட்டி இருந்த அசோக வனத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றார். அசோக வனம் என்ற நூலின் ஆசிரியரல்லவா? வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய் காலையும் மாலை தானும் இல்லதோர் கனகக் கற்பச் T. கம்ப. ஆரணிய-அகத்தியப்-57