பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24 மலரும் நினைவுகள் சோலையங் கதனுள் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையின் இருந்தாள் ஐய! தவம்செய்த தவமாம் தையல்’ என்ற பாடலைப் பாடத்தொங்கி விட்டார். காலையும். மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச் சோலை’ என்ற அடிக்கு அழுத்தம் கொடுத்துப் படித்தபோது இந்தப் புளியஞ்சோலையே அசோகவன்மாக மாறுகின்ற ஒருவித மயக்கத்தை உண்டாக்கி விடுகின்றது. பெரும்பாலும் பேராசிரியர் எங்குப் பேசினாலும் கவிதையைப் பற்றியே அதிகமாகப் பேசுவார். கவிதையில் வரும் சொற்களைப்பற்றி இவர் அடிக்கடி பேசுவது: கவிதைகளில் காணப்பெறும் சொற்களுக்கு வெறும் சொற்பொருள்தான் உண்டு என்பதில்லை. தொனிப் பொருளும் உண்டு. தொனிப் பொருளிலும் நானாவித ரகங்கள் உண்டு. இனம் இனத்தோடு என்பது போன்று, வெள்ளாட்டுக் கூட்டம் திரண்ட மாதிரி, ஒரு பொருளைச் சுற்றி பல தொனிப் பொருள்களும் துைைனப் பொருள் களும் தோன்றி விடும். எடுத்துக் காட்டாக தென்றல்' என்ற ஒரு சொல் கவிதையில் வருவதாகக் கொள்வோம். அதன் பொருள் தெற்கிலிருந்து வீசும் காற்று என்பது. மட்டும் பொருளன்று. இது பொதிகைமலையைக் குறிக்கும்: தமிழ் நாட்டைக் குறிக்கும்; தமிழின் மாட்சிகள் அனைத் தையும் குறித்து விடும். இதனால்தான் சொல் தன்னைப் பயன்படுத்துகின்ற கவிஞனை விட ஞானமுள்ளது என்ற கருத்தொன்று வழக்கில் பயின்று வருகின்றது. Words are wiser than those who use them staārgy 3.g6, orth. சொற்களின் மர்மங்களையும் விசித்திரப் பண்புகளையும் நன்றாக உணர்ந்து அவற்றின் அருமைப் பாடுகளை யெல்லாம் விளங்குமாறு அவற்றை அற்புதமாகக் கையாளுவார்கள் என்று சொல்லுவார். சில இடங்களில் 3. சுந்த, திருவடிதொழு-64